Morning Quotes: காலை உணவு குறித்தான குழப்பங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் நிலவும் நிலையில், காலை உணவானது எவ்வளவு முக்கியம், அந்த வேளையில் நாம் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து, பிரபல மருத்துவர் கு. சிவராமன் பேசி இருக்கிறார்

By Kalyani Pandiyan S
Aug 06, 2024

Hindustan Times
Tamil

இதுகுறித்து அவர் பேசும் பொழுது," இன்றைய பரபரப்பான உலகில் குழந்தைகளும் சரி, வேலைக்குச் செல்பவர்களும் சரி, காலை உணவை மிகவும் அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார்கள். ஆனால் உண்மையில் பார்த்தீர்கள் என்றால், காலை உணவுஅப்படி எடுக்கக் கூடிய உணவு கிடையாது. இன்னும் சில பேர் எடையை குறைக்கிறேன் என்று கூறிக்கொண்டு, காலை உணவை வேண்டும் என்றே முற்றிலுமாக தவிர்ப்பார்கள். அது உண்மையில் ஒரு முட்டாள்தனமான விஷயமாகும்.

காலை உணவு ஏன் அவ்வளவு முக்கியம் என்றால், இரவு நீங்கள் 9 மணி அளவில் சாப்பிடுகிறீர்கள். அதன் பின்னர் தூங்கச் செல்கிறீர்கள். அதனால் பல மணி நேரங்களாக வயிற்றில் எந்த உணவும் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது வயிற்றில் அமிலமானது சொட்டு சொட்டாக வந்து தேங்கி நிற்கும். அப்படி இருக்கக்கூடிய அமிலத்தை நாம் காலை உணவை சாப்பிட்டு செயல்முறைக்கு உள்ளாக்க வேண்டும். 

காலை உணவைப் பொறுத்தவரை, மிகவும் கடினமான உணவுகளை நம் உடலுக்கு கொடுக்கக் கூடாது. எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளை மட்டுமே காலை சிற்றுண்டியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது காலைக்கு மிக மிக சிறப்பான உணவு. 

அதாவது, இட்லி நம்முடைய காலைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் பொழுது உணவோடு சேர்த்து அதில் நம் குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கின்றன என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோல பொங்கலும் மிகச்சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.

சீரகத் தண்ணீர் நன்மைகள்