Constipation Issues : சாப்பாடு சாப்பிட்டவுடன் மலம் வரும் பிரச்னை உள்ளவாரா? இதோ உங்களுக்கான தீர்வு!
Constipation Issues : சாப்பாடு சாப்பிட்டவுடன் மலம் வருகிறதா? உங்களுக்கு தீர்வு கொடுக்கும் ஒரு எளிய பழக்கம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். அதற்கு நாம் நம் உணவுப்பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதுடன், உடற்பயிற்சியையும் செய்யவேண்டியது அவசியம்.
அதையும் மீறி நமக்கு ஏற்படும் நோய்களுக்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ஒரு சிலர் சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை இருக்கும். அதற்கு ஆங்கிலத்தில் இரிடபிள் பவல் சிண்ட்ரோம் என்று பெயர். சாப்பிட்டவுடன் மலம் கழிப்பதால் சாப்பாடு ரத்தத்தில் கலக்காமலே போய்விடும்.
நாம் சாப்பிடும் சாப்பாடு, சாப்பிட்டவுடன் ரத்தத்தில் கலக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். இதனால் அவர்களின உடல் எடை குறையவும், அதிகரிக்கும் காரணமாகும். இதற்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஃபிரஷ் தயிர் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
இந்துப்பு – தேவையான அளவு
செய்முறை
தயிரை நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்துவிட்டு, அதில் மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் என அனைத்தும் கலந்து காலை, மாலை, இரவு மூன்று வேளையும் அல்லது நீங்கள் எப்போது சாப்பிடச்சென்றாலும், அதற்கு முன்னர் இதை பருகவேண்டும். சாப்பிடச் செல்வதற்கு அரைமணி நேரம் முன் பருகவேண்டும். இதை உங்கள் பிரச்னை தீரும் வரை பருகவேண்டும்.
அப்படி பருகும்போது உங்கள் பிரச்னை படிப்படியாக குறையத்துவங்கும். அதன் பின்னர் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொண்டால் போதும். இதுபோல் நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு, நீங்கள் சாப்பிடும் சாப்பாடு தேவையான அளவு ரத்தத்தில் கலந்து உங்கள் உடலுக்கு போதிய ஆற்றலைக்கொடுக்கும்.
நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கெட்ட கொழுப்பாக மாறாமல் நல்ல கொழுப்பாகி உங்கள் உடலுக்கு நன்மை தரும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களும் இதை பருகி பலன்பெறலாம். வாயுத்தொல்லை நீக்கி, உடல் சோர்வைப்போக்கி உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.