Director Shankar: ‘சம்பள பஞ்சாயத்து.. வாழ்க்கை கொடுத்தவர போய்.. இது நன்றி கெட்டதனம்’ - குஞ்சுமோன் - ஷங்கர் சண்டை கதை!
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருவரும் வார்த்தைகளை விட்டதாக சொல்லப்படுகிறது. அன்று ஷங்கர், தான் இயக்கும் படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்கிக்கொண்டிருந்தார். இன்று அவருக்கு 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கு அண்மையில் இரண்டாவது திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கமல், ரஜினி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஷங்கருக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோன் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, “ உண்மையில் இது நன்றி கெட்ட தனம் என்று சொல்லலாம். தமிழனுக்கு, தமிழன் நன்றி மறக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் ஷங்கர் நன்றி மறந்து விட்டார்.
நீங்கள் சொல்லுங்கள், அன்று ஷங்கரின் ஜென்டில்மேன் திரைப்படத்தை அவ்வளவு பிரமாண்டமாக குஞ்சுமோன் எடுக்கவில்லை என்றால், இவர் இன்று இவ்வளவு பெரிய இயக்குனராக மாறியிருப்பாரா...?
முதலில் ஷங்கர் குஞ்சு மோனை, தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைக்கவில்லை. ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தையும் குஞ்சுமோனை தயாரித்தார். அதற்கு அடுத்தப்படத்திலும் ஷங்கரை கமிட் செய்ய நினைத்தார். ஆனால், சம்பள விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருவரும் வார்த்தைகளை விட்டதாக சொல்லப்படுகிறது. அன்று ஷங்கர், தான் இயக்கும் படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்கிக்கொண்டிருந்தார். இன்று அவருக்கு 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
என்ன பிரச்சினையாக இருந்தாலும், முதல் வாய்ப்பு கொடுத்தவர் என்ற காரணத்திற்காகவாவது, குஞ்சு மோனை திருமணத்திற்கு அழைத்து இருக்கலாம்.
அவர் விட்ட சாபம்தான் என்னமோ தெரியவில்லை, உங்களது மகளின் முதல் கல்யாணம் அப்படி மாறி, தற்போது இரண்டாம் கல்யாணத்திற்கு வந்திருக்கிறது.
குஞ்சுமோன் தன்னுடைய மகனை வைத்து கோடீஸ்வரன் என்ற படத்தை எடுத்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதில் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
இப்போது அவர் ஜென்டில்மேன் 2 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக வைரமுத்து பணம் வாங்காமல் பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, ஒரு இயக்குநராக நீங்கள் நன்றியோடு இருந்து, அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே” என்று பேசினார்.
முன்னதாக, இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனது. இந்த நிலையில் தன்னுடைய உதவி இயக்குநராக இருந்த தருண் கோபிக்கு ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை செய்யாறு பாலு ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசினார்.
அவர் பேசும் போது, “ ரோஹித் தரப்பு பெரிய கோஸ்வர குடும்பம். அதனை நம்பிதான் ஷங்கர் தரப்பு பெண்ணை கொடுத்து இருக்கிறது. அவர்களுக்கு புதுச்சேரியில் ஒரு கிரிக்கெட் அகாடமி, மதுரையில் ஒரு கிரிக்கெட் அகாடமி இருக்கிறது. அந்த அகாடமியில் சிறுமி ஒருவர் பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கிறார்.
அங்கு அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பெண், அந்த அகாடமியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார்கள் என்ற புகாரை, அங்குள்ள ஒரு பெரிய மனிதரிடம் சொல்லுகிறார்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெரிய மனிதர் மாணவியின் பெற்றோரை அழைத்து சமரசம் பேச முயற்சி செய்கிறார். அப்போது உங்கள் மகள் ரஞ்சி டிராஃபி, ஐபிஎல், இந்திய அணி ஆகியவற்றில் நிச்சயம் விளையாடுவாள்அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்று உறுதி கொடுக்கிறார்.
ஆனால் பெண்ணினுடைய பெற்றோரால் தனது குழந்தைக்கு நேர்ந்த அந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
காரணம் அந்த பெண் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தில் பெண் தரப்பு புகார் ஒன்றை அளிக்கிறது. இதனையடுத்து அவர்கள் களத்தில் இறங்கி விசாரிக்கும் பொழுது, ஒவ்வொருவராக வலையில் சிக்குகிறார்கள்.
அப்போதுதான் ஷங்கர் உடைய முன்னாள் மாப்பிள்ளை ரோஹித்தும் சிக்குகிறார். போக்சோ சட்டம் உள்ளே இறங்குகிறது. அதன் பின்னர் தான் தெரிகிறது அந்த ரோஹித் என்பவர் மிக மிக மோசமானவர் என்று... ஆறு மாதங்களாக ஷங்கர் மகள் ரோஹித் உடன் எப்படி குடும்பம் நடத்தினார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் மனம் நொந்து போனார் ஷங்கர். இருந்தாலும் பெண்ணை கொடுத்து விட்டோமே என்ற காரணத்திற்காக, அவரை காப்பாற்றும் முயற்சியில் கூட ஷங்கர் இறங்கினார். ஆனால் ஷங்கரின் மகளோ அவரை திட்டி இனி அவருடன் நான் வாழ மாட்டேன் என்று உறுதியாக சொல்ல, அதன் பின்னர் அவருக்கு மறுமணம் நடந்திருக்கிறது” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்