Coconut Milk Pulao : தேங்காய்ப்பாலில் சுவையான புலாவ் செய்யமுடியும்! அது எப்படி என்று பாருங்க! ருசித்து மகிழுங்கள்!
Coconut Milk Pulao : தேங்காய்ப்பாலில் சுவையான புலாவ் செய்யமுடியும். அது எப்படி என்று பாருங்க. ருசித்து மகிழுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.
தேங்காய்ப்பால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாறு எடுத்தும் பருகலாம். பழங்களில் பால் கலந்து பருகுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து பழச்சாறுகளை பருகிப்பழகலாம். தேங்காய்ப்பாலில் பொதுவாக சாதம் செய்ய முடியும். அதன் சுவை பிரியாணிக்கே டஃப் கொடுக்கும். அசத்தல் சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்வது எப்படி என்று பாருங்கள். இது பிரியாணி சுவையிலேயே இருந்தாலும், பிரியாணி செய்யும் முறையில் இருந்து கொஞ்சம் மாறுபடும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே கூடபோதுமானதுதான். தேங்காய்ப்பால் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். தேங்காய்ப்பால் சாதத்தை செய்வதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்
தேங்காய்ப்பாலில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது லாக்டோஸ் இல்லாததது. தாவர அடிப்படையிலானது. நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.
ஒரு கப் தேங்காய்ப்பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதம் உள்ளது. 16.9 கிராம் கொழுப்பு, 14.6 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 3.3 கிராம் கார்போஹைட்ரேட், 2.0 கிராம் சர்க்கரை உள்ளது.
தேங்காய்ப்பாலில் கொழுப்பு, சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. தேங்காய்ப்பால் கொழுப்பு நீக்கப்பட்டும் கிடைக்கிறது. தேங்காய்ப்பால் உங்கள் உணவுக்கு கிரீமி டெக்ச்ரைக் கொடுக்கும்.
தேங்காய்ப்பாலில் அலர்ஜி ஏற்படுத்தும் குணங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் இது யாருக்காவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது. எனினும் தேங்காய்ப்பாலை மிதமான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு உபயோகித்தால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். தேங்காய்ப்பாலை பயன்படுத்தும்போதும் அதில் தண்ணீர் அதிகம் கலந்து நீர்த்துப்போகச் செய்துதான் உபயோகிக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
தேங்காய்ப் பால் – இரண்டரை கப்
கேரட் – ஒரு கப் (துண்டுகளாக்கிக் கொள்ளவேண்டும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சைப் பட்டாணி – கால் கப்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முந்திரி துண்டுகள் – உடைத்தது
செய்முறை
பாஸ்மதி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவிடவேண்டும். அடுப்பி தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் அரிசியை சேர்த்து வேகவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு தட்டில் சேர்த்து ஆறவைத்துவிடவேண்டும்.
தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும். மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி, வறுத்த முந்திரி துண்டுகள் தூவி பரிமாறவேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், உணவுகள் மற்றும் பானங்கள், கழிவுநீக்க சாறுகள் என பலவற்றையும், ஆரோக்கிய குறிப்புகளையும், தகவல்களையும் ஹெச்.டி. தமிழ் உங்களுக்காக தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்தி பலன்பெற எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்