Basmathi Rice : பொல பொலவென மல்லிகை பூபோல் மலர்ந்த சாதம் வேண்டுமா? பாஸ்மதி அரிசியை இப்டி செஞ்சு பாருங்க!
Basmathi Rice : பாஸ்மதி அரிசியை சரியாக சமைத்து எடுப்பது எப்படி என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த கப்பில் அரிசி எடுத்தீர்களோ அதே கப்பில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் பாஸ்மதி அரிசியில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சரியாக அரை மணி நேரம் கட்டாயம் ஊறவைக்க வேண்டும். இந்த அளவு நேரம் ஊறவைத்தால்தான் சாதம் வெந்து நன்றாக பொல பொல வென்று வரும்.
இந்த அரிசியை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அடி பிக்காமல் நன்றாக வரும்.
இதை ஆறவைத்துவிட்டால், அனைத்து வகை சாதங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஃப்ரைட் ரைஸ் செய்ய வேண்டுமெனில் காய்கறிகளுடன் சேர்த்து வறுத்துக்கொள்ளலாம் அல்லது புளி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம், தக்காளி சாதம் என அனைத்து வகை சாதங்களையும் இதை பயன்படுத்தி செய்துகொள்ளலாம்.
பாஸ்மதி அரிசியை சரியாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாஸ்மதி அரிசியை பயன்படுத்தி செய்யும் உணவுப்பொருட்கள் சுவையானதாக இருக்கும்.
இந்த பாஸ்மதி அரிசியில் எளிமையாக சீரக சாதம் அல்லது ஜீரா ரைஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசியை நன்றாக அலசிவிட்டு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்க்க வேண்டும்.
சீரகம் பொரிந்தவுடன் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து, 2 கப் தண்ணீருடன் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை அப்படியே முழுவதும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிட்டு 2 விசில் மட்டும் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
குக்கர் ரிலீஸ் ஆனவுடன் எடுத்துவிட்டால் சாதம் பொலபொலவென்று நன்றாக வெந்து வந்திருக்கும். அப்படியே தால் அல்லது ஏதேனும் ஒரு கிரேவியுடன் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்