Clean your Gut : உறங்கச்செல்லும் முன் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்! குடலில் உள்ள கழிவுகள் காணாமல் போகும்!
Clean your Gut : உறங்கச்செல்லும் முன் இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும். குடலில் உள்ள கழிவுகள் காணாமல் போய்விடும்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
ஃப்ளாக்ஸ் விதைகள் – ஒரு கப்
ஃப்ளாக்ஸ் விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்தது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கும். இதுமட்டுமின்றி ஃப்ளாக்ஸ் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
பரங்கிக்காய் விதைகள் – அரை கப்
உடலை சுத்தம் செய்யும். இயற்கை மலமிளக்கி, மலச்சிக்கலைத்தடுக்கும். வயிறு உப்புசம், வயிறு இரைச்சலைத்தடுக்கும்.
கிராம்பு – 15
பசியைத்தூண்டும், செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும். குடலில் வாயுக்கள் உருவாவதைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ப்ளாக்ஸ் விதைகள் மற்றும் பரங்கி விதைகள் இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் கிராம்பை முழுவதும் சேர்க்கவேண்டும். அனைத்தையும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, இந்தக்கலவையை பாட்டிலுடன் உள்ளே வைத்து சூடாக்கவேண்டும். தண்ணீர் கொதித்து, பாட்டிலில் உள்ள கலவையை கொதிக்க வைக்கும். அது கொதித்தவுடன், வடிகட்டி மற்றொரு பாட்டிலில் வடிகட்டிக்கொள்ளவேண்டும். இதை காற்றுப்புகாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.
தினமும் உறங்கச்செல்லும் முன் இரவு ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு படுத்தால் உங்களின் குடல்கள் அனைத்தும் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு, அதில் இருந்து அழுக்குகள் வெளியேற்றப்படும். காலையில் எழுந்தவுடன் மலம் எவ்வித சிக்கலும் இன்றி கழிந்து உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு ஹெச்.டி தமிழ் இணைய பக்கத்தில் எப்போதும் இணைந்திருங்கங்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்பட பல்வேறு குறிப்புகள் வழங்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்