மிளகாயில் தேநீரா? காரமாக இருக்குமே என்ற கவலை வேண்டாம்; நன்மைகள் தெரிந்தால் தித்திக்கும்! 5 அற்புத குணங்களை பாருங்கள்!
மிளகாய் தேநீரை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்.

மிளகாயில் தயாரிக்கப்படும் தேநீரில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. இந்த டீ உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு டீ பிடிக்கும் என்றாலோ நீங்கள் புதிய மூலிகை தேநீரை சாப்பிட விரும்பும் நபர் என்றாலோ இந்த தேநீரை கட்டாயம் பருகுங்கள். தென்கிழக்கு ஆசியாவில் நாம் பயன்படுத்தும் இந்த தேநீர் என்பது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகாய் தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள கேப்சைசின் என்பதுதான் மிளகாயின் சூடான தன்மைக்கு காரணம். இது உங்கள் உடல் வளர்சிதைக்கு உதவும். உங்களின் வலியைப் போக்கும். உங்களின் மனநிலையை மாற்றும். இந்த தேநீர் உங்களுக்கு தரும் இதம், நீங்கள் காரம் விரும்பி என்றால் மிகவும் பிடிக்கச் செய்யும். உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் ஊட்டமளிக்கும்.
மிளகாய் டீ
கட்டாஞ்சாயா அல்லது கிரீன் டீ இரண்டிலும் பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் சேர்த்து தயாரிக்கப்படுவது மிளகாய் டீ. இதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. இதையெல்லாம் சேர்த்து செய்யும்போது ஒரு சூப்பர் சுவையான மிளகாய் டீ கிடைக்கிறது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வலிகளைக் குறைக்கிறது
கேப்சைசின் என்ற உட்பொருள் தான் மிளகாய்க்கு அதன் கடும் சூட்டைத் தருகிறது. இதில் வலிகளைப் போக்கும் குணங்கள் உள்ளது. இது ஆய்வில் கிடைக்கும் தகவல். கேப்சைசின் நிறைந்த மிளகாயை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் காரணிகளை குறைக்கிறது. இதனால் உங்களின் வலி உணரும் திறன் குறைவாகிறது. ஆர்த்தரிட்டிஸ் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது தசைகளில் அசவுகர்யத்தைப் போக்குகிறது. மூளைக்குச் செல்லும் வலி சிக்னல்களில் கேப்சைசின் இடையூறு ஏற்படுத்தி, குறிப்பிட்ட அளவு நிவாரணத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு வலியற்ற நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.