Chilli Paneer: வெஜ் பிரியர்களின் புரத தேவையை பூர்த்தி செய்யும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சில்லி பன்னீர்.. வீட்டில் செய்யலாம்!
Chilli Paneer: பன்னீரில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. எனவே இது ஆரோக்கியமான உணவு என்று கூறப்படுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் புரதத்திற்கான ஒரு நல்ல தேர்வாகும். எனவே வீட்டில் ஒருமுறை சில்லி பன்னீர் செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
Chilli Paneer: ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி. ருசியான சில்லி பன்னீரை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி பார்க்கலாம்.
சில்லி பன்னீர் செய்முறைக்கு தேவையான பொருட்கள்
பன்னீர் துண்டுகள் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்
சோள மாவு - ஒன்றரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
எண்ணெய் - போதுமானது
சீரகம் - அரை ஸ்பூன்
தண்ணீர் - போதுமானது
பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் - நான்கு
வெங்காயம் - ஒன்று
சில்லி பூண்டு சாஸ் - ஒரு ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிட்டிகை
சிவப்பு மிளகாய் - ஒன்று
மஞ்சள் காப்சிகம் - ஒன்று
சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - கொத்து
உப்பு - சுவைக்க
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - நான்கு கரண்டி
சில்லி பன்னீர் செய்முறை
1. பன்னீர் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பன்னீர் துண்டுகள் நன்றாக சேர்த்து கலந்து விட வேண்டும்
2. பிறகு முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இப்போது கடாயை அடுப்பில் வைத்து, வறுக்க போதுமான அளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
4. எண்ணெய் சூடு ஆறிய பின் இந்த பன்னீர் துண்டுகளை சேர்த்து சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
5. வறுத்த பன்னீரை தனியாக வைத்திருக்க வேண்டும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.
6. சீரகம், பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காய விழுது, கொத்தமல்லி தூள், மிளகாய் பூண்டு சாஸ், ரெட் கேப்சிகம் பேஸ்ட், மஞ்சள் கேப்சிகம் பேஸ்ட், சோயா சாஸ், மஞ்சள்தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு, முட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக எண்ணெய்யில் வதக்க வேண்டும்.
7.நன்றாக வதங்கிய பிறகு ஏற்கனவே வறுத்து வைத்த பன்னீர் துண்டுகளையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.
8. நன்றாக கலந்து விட்ட பின் இரண்ட நிமிடம் கழித்து பன்னீரின் மீது கொத்தமல்லி தூவி இறக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விடலாம்.
9. அவ்வளவுதான் ருசியான சில்லி பன்னீர் தயார். சாப்பிட சுவையாக இருக்கும். ஒருமுறை செய்து தந்தாலே குழந்தைகள் இதை மீண்டும் மீண்டும் கேட்பது உறுதி.
10. காரமாக வேண்டுமானால் பச்சை மிளகாய், மிளகாய் அதிகம் சேர்த்து காரமாக செய்யலாம். அல்லது சாதாரணமாக சமைக்கலாம். உங்கள் குழந்தைகள் எப்படி விரும்புகிறார்களோ அதன்படி சமைக்கவும். விருப்பம் உடையவர்கள் மசாலா பொருட்களை சேர்த்த கலந்து விட்ட பின் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ளலாம்.
இதில் முட்டையை பயன்படுத்தி உள்ளோம். உங்களுக்கு முட்டை பிடிக்கவில்லை என்றால் சேர்க்க வேண்டியதில்லை. இன்னும் கொஞ்சம் சோள மாவு அதிகம் சேர்த்தால் போதும். அல்லது இரண்டு ஸ்பூன் உளுந்து மாவு சேர்க்கவும்.
பன்னீரில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. எனவே இது ஆரோக்கியமான உணவு என்று கூறப்படுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் புரதத்திற்கான ஒரு நல்ல தேர்வாகும். எனவே வீட்டில் ஒருமுறை சில்லி பன்னீர் செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9