குழந்தைகளுக்கு பிடித்த கார்ன்; மக்காச்சோளம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
மக்காச்சோளத்தின் நன்மைகள் என்ன?
குழந்தைகளுக்கு கார்ன் என்றால் மிகவும் பிடித்த ஒன்று. அதை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எனவே நீங்கள் மக்காச்சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். மக்காச்சோளத்தை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை சூப்கள், சாலட்கள், ஃப்ரைட் ரைஸ் என எதில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஒரு நல்ல டெசர்ட் ஆகும். இதை சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டு என்று பாருங்கள்.
முக்கிய வைட்டமின்கள் நிறைந்ததுதான் இந்த மக்காச்சோளம்
கார்னில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக வைட்டமின் பி1 மற்றும் பி9 அதிகம் உள்ளது. இதில் மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது
கார்னில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் கார்போஹைட்ரேட்களை உறிஞ்சுவதில் தலையிட்டு, உங்கள் ரத்தத்தில் திடீரென்று ஏற்படும் சர்க்கரையின் அளவைத் தடுக்கிறது.
உடல் எடை குறைப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்
மக்காச்சோளத்தில் கலோரிகள் குறைவு. ஆனால், அதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளும் அளவையும் குறைத்து, உங்களின் உடல் எடையை சரியான முறையில் பராமரிக்கச் செய்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
மக்காச்சோளத்தில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் முக்கிய ஊட்டச்சத்தாகும். இது உங்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து காக்கிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
கார்னில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஃபைட்டோ ஊட்டச்சத்துக்கள், உங்களுக்கு எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது.
கண் பார்வையைக் கூராக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
மக்காச்சோளத்தில் உள்ள லுடின் மற்றும் ஸியாக்ஸான்தின், என்ற இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து கண்களை பாதுகாக்கிறது. வயோதிக்கத்தால் ஏற்படும் கண்புரை நோய் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது.
குளூட்டன் இல்லாத உணவு
கார்னில் இயற்கையாகவே குளூட்டன் இல்லை. இது செலியாக் நோய் எனப்படும் செரிமானக் கோளாறுகளால் நீண்ட காலம் அவதிப்படும் நபர்களுக்குத் தேவையான ஆற்றலைத்தரும். இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது
கார்னில் உள்ள ஃபெரூலிக் அமிலம், பர்பிள் கார்னில் உள்ள ஆந்தோசியானின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. நாள்பட்ட நோய்களுக்கு எதிரான பாதுகாப்பைத் தருகிறது.
நார்ச்சத்துக்கள் செரிமானத்தைத் தருகிறது
கார்னில் செரிமானத்தைத் தரக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது உங்களின் செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கார்னை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்