சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொஸ்து.. பாரம்பரிய முறையில் ஈசியா செய்யலாம்.. இட்லி, தோசை, பொங்கலுக்கு சரியான காமினேஷன்!
பாரம்பரியமான கத்தரிக்காய் கொஸ்து ருசி அட்டகாசமாக இருக்கும். வீட்டில் ஒரே ஒரு முறை செய்து கொடுங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடு வாங்க. பொங்கல் மட்டும் இல்லை இட்லி, தோசைக்கும் இது சரியான காமினேசன். இப்போது கத்தரிக்காய் கொஸ்து செய்வது எப்படி என பார்க்கலாம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதமான கத்தரிக்காய் கொஸ்து ஈசியா வீட்டிலேயே செய்யலாம். பாரம்பரியமான கத்தரிக்காய் கொஸ்து ருசி அட்டகாசமாக இருக்கும். வீட்டில் ஒரே ஒரு முறை செய்து கொடுங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடு வாங்க. பொங்கல் மட்டும் இல்லை இட்லி, தோசைக்கும் இது சரியான காமினேசன். இப்போது கத்தரிக்காய் கொஸ்து செய்வது எப்படி என பார்க்கலாம்.
கத்தரிக்காய் கொஸ்து செய்ய தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் -4
வெங்காயம் - ஒரு கைபிடி
மிளகாய் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
மல்லிவிதை 1 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
வரமிளகாய் - 4
கடுகு -1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைபிடி
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி - ஒரு சிறிய உருண்டை
வெல்லம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் 4 ஸ்பூன்
செய்முறை
கத்தரிக்காய் மேல் பகுதியில் எண்ணெய் தடவி சுட வேண்டும். நன்றாக சுட்ட பிறகு அதன் மேல் தோலை நீங்கி லேசாக மசித்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்புகள் சூடான பிறகு அதில் ஒன்றரை ஸ்பூன் மல்லி விதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். மல்லி விதை நன்றாக வறுந்த பிறகு அதில் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் நன்றாக வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் வைத்து ஆற விட்டு அரைக்க வேண்டும். லேசான கொரகொரப்பாக இந்த புவுடரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில்,ஒரு சிட்டிகை வெந்தயம் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு கைபிடி சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். அதில் ஒரு 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் கத்தரிக்காயை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு எலுமிச்சை அளவு புளியை நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த உடன் அதில் ஒரு ஸ்பூன் வெல்ல துருவல் மற்றும் ஏற்கனவே அரைத்த பொடியையும் சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடம் கொதித்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கினால் ருசி அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு : கத்தரிக்காயை சுடாமல் அப்படியே நறுக்கி வதக்கியும் பயன்படுத்தலாம். ஆனால் சுட்டு செய்தால் ருசி அட்டகாசமாக இருக்கும். இதில் கடைசியாக வேக வைத்த பாசி பருப்பை சேர்த்து கொதிக்க விட்டும் பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்