Carrot Omelette: குழந்தைகளுக்கு பிடித்த ருசியான கேரட் ஆம்லேட் செய்வது எப்படி? - ஈஸி டிப்ஸ் இதோ..!
Carrot Omelette Recipe: சுவையான கேரட் ஆம்லேட் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்பும் போது கொஞ்சம் சோர்வாக காணப்படுவார்கள். அப்போது குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். அதற்கு ஏற்ற பல ஸ்நாக்ஸ்கள் இருந்தாலும் சத்து நிறைந்த ஒரு உணவை குழந்தைகளுக்கு கொடுப்பது பெற்றோர்களின் கடைமை. அந்த வகையில் உங்கள் குழந்தை வீட்டிற்கு வந்ததும் என்ன கொடுக்க வேண்டும் என யோசிப்பவர்கள்
தினமும் பாலுக்குப் பதிலாக, கேரட் ஆம்லெட் போன்றவற்றை தினமும் ஒரு முறை செய்து கொடுக்கலாம். வயிற்றை அதிக நேரம் நிரம்ப வைக்கும். அவர்கள் ஒருபோதும் சலிப்படைய மாட்டார்கள். இது நல்ல தூக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
கேரட் ஆம்லேட் செய்வதும் மிகவும் எளிதானது. வெறும் 15 நிமிடங்களில் இதை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அந்த சுவையான கேரட் ஆம்லேட் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
கேரட் ஆம்லெட் செய்முறைக்கு தேவையான பொருட்கள்
கேரட் துருவல் - கால் கப்
முட்டை - இரண்டு
வெங்காயம் - ஒன்று
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் - ஒன்று
உப்பு - சிறிதளவு
கொத்தமல்லி தூள் - இரண்டு ஸ்பூன்
கேரட் ஆம்லெட் செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட் சேர்த்து வதக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு, மிளகுதூள் முன் வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தூள், துருவிய கேரட் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு தவாவில் கலக்கி வைத்த முட்டைக் கலவையை வட்ட வடிவ ஆம்லேட்களாக, ஒரு ஸ்பூனால் எடுத்து பரப்பி, வேகவிட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விட்டு எடுக்கவேண்டும். சத்தான கேரட் ஆம்லேட். அதிக நேரம் எடுக்காது கேரட் ஆம்லேட் செய்வது எளிது. எனவே வாரத்திற்கு இரண்டு மூன்று முறை கேரட் ஆம்லெட்டை இப்படி செய்து குழந்தைக்கு கொடுத்தால் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
மாலையில் மட்டுமின்றி காலை உணவாகவும் குழந்தைகளுக்கு இதை பரிமாறலாம். இதில் புரதம் நிறைந்துள்ளது. அதனால் குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள்.
முட்டை உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. ஒரு முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளன. முட்டையில் வைட்டமின் A, வைட்டமின் B12, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான் இது முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது. காலை உணவு அல்லது மாலை சிற்றுண்டியில் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க வேண்டும்.
கேரட் எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள பீட்டா கெரட்டின் குழந்தைகளின் பார்வைக்கு மிகவும் உதவுகிறது. பார்வை பிரச்னைகளை விரைவில் தடுக்கிறது. இது அவர்களின் தோல் மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. இதனால் அவர்களின் சருமம் ஒளிரும். வாரத்திற்கு மூன்று முறை சரியாக கேரட் ஆம்லெட் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த ஆம்லெட்டை சாப்பிடலாம். இது அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்