Pregnancy Food: கர்ப்பிணிகளுக்கேற்ற பசலைக்கீரை ஆம்லேட், சியா போம் ஜூஸ், பாதாம் சிக்கன் சூப் செய்வது எப்படி?
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் குறித்துப் பார்க்கவும்.
கர்ப்பகால உணவு என்பது தாய்மார்கள் மற்றும் பிறக்காத குழந்தையின் நல்வாழ்வுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் குழந்தைகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ணவேண்டும்.
இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், சிட்ரஸ் அமிலம் கொண்ட பழங்கள், மீன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இதுதொடர்பாக பெங்களூருவைச் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் வஹிதா ஆரோக்கியமான சமையல் குறிப்புகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
1.பசலைக்கீரை அவகேடோ ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை - 3;
பசலைக்கீரை(நறுக்கியது) - 1/2 கப் கழுவியது;
அவகேடோ பழம்(நறுக்கியது) - 1/2 கப் கழுவியது;
உப்பு - தேவையானது;
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்;
வறுத்த கருப்பு எள் - 1/2 டீஸ்பூன்;
வறுத்த வால்நட் பருப்புகள் - 1 டீஸ்பூன்;
கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிதளவு
நறுக்கிய செய்முறை:
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பசலைக்கீரை சேர்த்து,அதனுடன் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின் அதை தனியாக ஒதுக்கி வையுங்கள்.
- முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, வதக்கிய கீரையை அதனுள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும். இருபுறமும் நன்கு வதக்கி நறுக்கிய அவகேடோவை சேர்க்கவும். பின்னர், வறுத்த எள் மற்றும் வால்நட்களை அதன்மேல் தூவி ஆம்லெட்டை மடிக்கவும். இரண்டு பக்கமும் சில நிமிடங்கள் புரட்டி எடுக்கவும்.
- சுவையான பசலைக்கீரை அவகேடோ ஆம்லெட் தயார்.
2.சியா போம் ஜூஸ்:
தேவையான பொருட்கள்
இளநீர் - 1/2 கப்;
மாதுளை சாறு - 1/2 கப்;
பெர்ரிப் பழச்சாறு - 1/2 கப்;
ஊறவைத்த சியா விதை - 2 தேக்கரண்டி;
தேன் - சுவைக்கு ஏற்ப;
புதினா - 4-5 இலைகள்
செய்முறை
- ஒரு பெரிய டம்ளரில் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
- தேவையான இனிப்புக்கு ஏற்ப சியா விதைகள் மற்றும் சிறிது தேனை சேர்க்கவும். இறுதியாக அதன்மேல், புதினா இலைகளை வைத்து பரிமாறவும். இதை உட்கொள்ளும்போது, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான வைட்டமின் சி, ஒமேகா 3 எஃப்.எஃப்.ஏ மற்றும் இரும்புச்சத்து ஆகியவை கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும்.
3. பாதாம் சிக்கன் சூப்:
தேவையான பொருட்கள்
சிக்கன் (ஒல்லியான) - 2;
நறுக்கிய காய்கறிகள் - 1 கப் ((பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, மக்காச்சோளம்));
சமைத்த கோதுமை - 1/2 கப்;
நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு - 1/2 டீஸ்பூன்;
நறுக்கிய பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள் - 2 டீஸ்பூன்;
பாதாம் வெண்ணெய் - 1 டீஸ்பூன்;
மசாலா மற்றும் மூலிகைகள் - தேவையான அளவு;
உப்பு மற்றும் மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
- அடுப்பில் மசாலாப் பொருட்களுடன் சிக்கன் குழம்பினை வைத்து மீண்டும் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
- நறுக்கிய காய்கறிகள் (பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, மக்காச்சோளம்) மற்றும் முன்பே சமைத்த கோதுமையினை சேர்க்கவும்.
- இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை அதனுள் சேர்க்கவும். காய்கறிகள் வேகும் வரை கொதிக்கவிடவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து பாதாம் வெண்ணெய் சேர்க்கவும். பானையிலிருந்து சூடான சிக்கன் குழம்பை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் பாதாம் வெண்ணெயை சீராக கலக்கவும்.
- பாதாம் மற்றும் வால்நட் கலவையை மீண்டும் பிரதான சூப் பானையில் ஊற்றி, அது இணையும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். சூப்பை கூடுதலாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இதனால் சுவை மெருகேறும். வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.
- புரோட்டீன் நிறைந்த சிக்கன் பாதாம் சூப்பை இரவில் குடிக்கவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்