Chana Kofta curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chana Kofta Curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?

Chana Kofta curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 02, 2024 09:57 AM IST

Chana Kofta curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?Chana Kofta curry: How to do it again, again to taste again?

Chana Kofta curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?
Chana Kofta curry : கொண்டக்கடலை கோஃப்தா கறி! மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் ருசியில் செய்வது எப்படி?

பச்சை மிளகாய் – 1 நறுக்கியது

இஞ்சி – 1 துண்டு நறுக்கியது

பூண்டு – 2 பல் நறுக்கியது

சீரகம் – அரை ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

வரகொத்தமல்லித்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

மசாலா கிரேவி செய்ய

உப்பில்லாத வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வெங்காயம் – 2 நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 கீறியது

இஞ்சி – ஒரு துண்டு நறுக்கியது

பூண்டு – 5 பல்

தக்காளி – 4 நறுக்கியது

முந்திரி பருப்பு – கைப்பிடியளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

வரமல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

கசூரி மேத்தி – சிறிதளவு

ஃபிரெஷ் கிரீம் – அரை ஸ்பூன்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் கொண்டக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் மிக்ஸியில் ஊறவைத்த கொண்டக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் இன்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்ததை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உருட்டிய கோஃப்தா உருண்டையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கிரேவி செய்ய, கடாயில், உப்பில்லாத வெண்ணெய் மற்றும் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து தக்காளி, முந்திரி பருப்பு இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிவிடவேண்டும்.

பின்பு சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தக்காளி நன்றாக மசிந்ததும், கலவையை ஆறவிடவேண்டும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் உப்பில்லாத வெண்ணெய், அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

அடுத்து உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவேண்டும். 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, பின்னர் கசூரி மேத்தியை சேர்த்து கலந்து விட்டால் கிரேவி தயார்.

ஒரு பாத்திரத்தில் கிரேவியை ஊற்றி கோஃப்தா உருண்டையை வைத்து அதன் மேலே பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலையை தூவவேண்டும்.

சுவையான கொண்டக்கடலை கோஃப்தா கறி தயார்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.