Cauliflower Bajji : காலிஃப்ளவர் பஜ்ஜி; குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ்! திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும்!
Cauliflower Bajji : காலிஃப்ளவர் பஜ்ஜி குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ். திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் சுவை நிறைந்தது.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 400 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
காலிஃப்ளவரை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவேண்டும்.
பின் தள தளவென்று கொதிக்கும் நீரை காலிஃப்ளவர் பூக்கள் மூழ்கும் அளவு சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரை முழுவதும் வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
மீண்டும் ஒருமுறை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவேண்டும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளோர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
பின்னர் கால் கப் தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக தெளித்து கெட்டியான பதத்திற்கு கலந்துகொள்ளவேண்டும். பின் 15 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சூட்டை மிதமான அளவில் வைத்து ஒவ்வொரு பூக்களாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
கீழ்புறம் லேசாக வெந்ததும் மெதுவாக திருப்பி எல்லா பக்கங்களிலும் சமமாக மொறு மொறுப்பாகும் வரை பொரித்து எடுக்கவேண்டும். மொறு மொறுப்பான காலிஃப்ளவர் வறுவல் தயார்.
நன்றி – முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன்.
காலிஃப்ளவரின் நன்மைகள்
கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் 5 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. 30 கலோரிகள் மட்டுமே கொண்டது.
கார்போஹைட்ரேட் குறைவான உணவு உட்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை எடுத்துக்கொள்வது நல்லது. காலிஃப்ளவரில் வயோதிகத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான தன்மைகள் உள்ளது.
ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நாள்பட்ட வியாதிகளின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
கார்போஹைட்ரேட் குறைந்த உணவு.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
வயோதிகத்தை தாமதப்படுத்தும்.
வீக்கத்தை குறைக்கிறது.
உங்கள் உடல் இயற்கை முறையில் கழிவு நீக்கம் செய்ய உதவுகிறது.
ஒரு கப் காலிஃப்ளவரில், கலோரிகள் 26.8, கொழுப்பு 0.3 கிராம், சோடியம் 32.1 மில்லிகிராம், கார்போஹைட்ரேட்கள் 5.32 கிராம், நார்ச்சத்துக்கள் 2.14 கிராம், புரதச்சத்துக்கள் 2.05 கிராம், சர்க்கரை 0 கிராம் உள்ளது.
காலிஃப்ளவர் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்
காலிஃப்ளவர் வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது. செரிமான கோளாறுகள் உள்ளவர் அளவாக மட்டுமே காளிஃப்ளவரை எடுத்துக்கொள்ளவேண்டும். வயிறு எரிச்சல் கொண்டவர்கள் காளிஃபிளவரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது அவர்களுக்க வலி, உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வாயுத்தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.
சாப்பிடும் விதங்கள்
இதை ஓட்சுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு உடலுக்கு கூடுதல் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். கேக், பிரவுனி, புட்டிங்குகளிலும் நீங்கள் காலிஃப்ளவரை சேர்த்துக்கொள்ளலாம். இதை அவகேடோவுடன் சாப்பிடும்போது சுவை கூடுதலாக இருக்கும். உருளைக்கிழங்கு சேர்க்கும் இடங்களில் காலிஃப்ளவரை சேர்ப்பது உணவின் கூடுதல் சுவைக்கு காரணமாகும்.
வெள்ளை காலிஃப்ளவரைத்தான் நாம் அதிகம் பார்த்துள்ளோம். ஆனால், இது பர்பிள், ஆரஞ்ச் மற்றும் பச்சை நிறங்களிலும் வருகிறது. வெள்ளை காலிஃப்ளவரைவிட வண்ண காலிஃப்ளவர்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும்.
டாபிக்ஸ்