உங்களை ஏமாற்றும் நபரிடம் இருந்து விலகியிருக்க முடியவில்லையா? இந்த 10 வழிகள் உங்களுக்கு உதவும்!
உங்களை ஏமாற்றும் நபரிடம் இருந்து விலகியிருக்க முடியவில்லையா? இந்த 10 வழிகள் உங்களுக்கு உதவும். அதைப்பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
ஒரு உறவில் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. உறவில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் உறவில் உங்களை ஒருவர் ஏமாற்றுகிறார் என்றால், அவரிடம் இருந்து விலகியிருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உறவில் ஒருவர் ஏமாற்றும்போதும் அந்த உறவு நீர்த்துப்போகிறது அல்லது அர்த்தமற்றதாகிறது. உறவில் ஏமாற்றுவது என்பது, ஆழ்ந்த துரோகம் ஆகும். இதனால் உணர்வு கொந்தளிப்பு, இதயம் உடைவது மற்றும் நம்பிக்கை குறித்து மீண்டும் நாம் மதிப்பிடுவது ஆகியவை நடக்கிறது. இதனால் நீங்கள் உறவில் ஏமாற்றும் நபரிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்வீர்கள். ஆனால் அது உங்களால் முடியாதபோது, நீங்கள் இந்த குறிப்புக்களை பின்பற்றினால் அந்த உறவில் இருந்து மீளமுடியும்.
வெளிப்படையான உரையாடல்
உங்கள் பார்ட்னருடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுங்கள். அவர்களின் செயல்கள் எப்படி உங்களை பாதிக்கிறது என்று பாருங்கள். அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள், வெளிப்படையான உரையாடல் இல்லாவிட்டால் உறவில் சிக்கல்கள் ஏற்படும்.
எல்லைகள் வகுத்துக்கொள்ளவேண்டும்
எந்த உறவிலும் தெளிவான எல்லைகள் இருக்கவேண்டும். குறிப்பாக காதல் உறவில் கட்டாயம் இருக்கவேண்டும். அதுதான் உங்களை நேர்மையானவராக மாற்றும். உங்கள் உறவை முன்னெடுத்துச்செல்ல உதவும்.
உங்களை நீங்களே திட்டிக்கொள்வது கூடாது
உங்களிடம் மீண்டும், மீண்டும் கூறிக்கொள்ளுங்கள், துரோகம் என்பது ஏமாற்றும் நபர்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம். அது உங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. எனவே நீங்களே உங்களை திட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏமாற்றப்பட்ட உணர்வுகள் இருந்தாலோ உங்களுக்கு அதில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் கொடுங்கள். அப்போது நீங்கள் எவ்வித தவறான முடிவுகளும் எடுத்துவிடக்கூடாது.
நிபுணர்களின் உதவி
இணையர்கள் இருவரும் சேர்ந்து, சிகிச்சை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், நம்பிக்கையை மீண்டும் வளர்த்தெடுக்கவும் அல்லது பிரிவு இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வழிகளைப்பாருங்கள். அதற்கு நிபுணர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவும்.
உங்கள் மீதான அக்கறை
உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். இது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களை வலுப்படுத்தும் காரணியாகவும் அமையும். எனவே உங்கள் மீதான அக்கறறை என்பது மிகவும் முக்கியம்.
உறவுகள் குறித்த பரிசீலனை
இந்த உறவை நீடிக்கலாமா அல்லது விட்டு விலகிவிடலாமா என்பது குறித்து முடிவெடுங்கள். ஏனெனில் ஏமாற்றம் நிறைந்த உறவில் இருப்பது உங்களுக்கு மீண்டும், மீண்டும் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டால் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
தேவைபட்டால் மட்டும் தொடர்புகொள்ளுங்கள், தேவையற்ற தொடர்பை துண்டித்து விடுங்கள்
உங்களுக்கு தேவையென்றால் மட்டும் உங்கள் பார்ட்னரை தொடர்புகொள்ளுங்கள். இல்லாவிட்டால், அவர்களிடம் பேசுவதை நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
மன்னிப்பு
உங்களால் உங்கள் பார்ட்னரை மன்னிக்க முடியமா என்று பாருங்கள். மன்னிப்பு என்பது உங்களைப் பொறுத்தவரை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களால் மன்னிக்க முடிந்தால் மன்னித்து உறவை தொடருங்கள்.
ஆதரவு
இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஒரு ஆதரவு தேவை. எனவே நண்பர்கள் மற்றும் உறவினர்களை தேவைப்பட்டால் இதில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை மற்றவர்களிடம் தேவைப்பட்டால் வெளிப்படுத்திவிடுவீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்