உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Nov 05, 2024 10:09 AM IST

உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!
உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

ஆர்வத்தை தூண்டவேண்டும்

குழந்தைகள் இயற்கையாகவே ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டுத்தான் தங்களை வளர்த்துக்கொள்வார்கள். உங்கள குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதற்கும், புதிய யோசனைகளை அவர்களுக்கு கொடுக்கவும், அச்சமின்றி கேள்விகள் கேட்கவும் பயன்படுத்தவேண்டும். அவர்கள் இயற்கை, அறிவியல் மனிதர்கள் என எந்த கோள்விகளைக் கேட்டாலும், அவர்களுக்கு நீங்கள் பதிலளிக்கவேண்டும். இது அவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். அவர்களுக்கு கற்க வேண்டும் எண்ணத்தையும் தூண்டி இதை வாழ்நாள் வரை அவர்கள் கற்க உதவும்.

ஒன்றாக இணைந்து படியுங்கள்

நீங்கள் ஒன்றாக சேர்ந்து படிக்கும்போது, உங்களின் வார்த்தைகள் குறித்த அறிவு விரிகிறது. புதிய எண்ணற்ற வார்த்தைகளை கற்றுக்கொள்கிறீர்கள். உங்களின் கற்பனை சக்தி தூண்டப்படுகிறது. உங்கள் மூளையின் திறன்களுக்கும் ஊக்கம் அளிக்கிறது. எனவே வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் அன்றாட பழக்கமாகக் கொள்ளவேண்டும். அவர்கள் விரும்பும் புத்தகங்களைப் படிப்பதற்கு ஊக்குவிக்கவேண்டும். சத்தமாகப் படித்து கதைகள் குறித்து உரையாடவேண்டும். இதனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனும், அவர்களின் பார்வையும் விரிவடையும்.

நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குங்கள்

உங்கள் வீட்டில் கற்கவும், கிரியேட்டிவ் வேலைகள் செய்யவும் ஒரு இடத்தை அமைத்துக்கொடுங்கள். அது அழகாக இருக்கவேண்டும் என்பது கிடையாது. ஆனால் சுத்தமாக, நன்றாக புத்தகங்களை அடுக்கி வைத்து, தேவையான பசில்கள், தேவையான கலர் பென்சில்கள் என இருக்கவேண்டும். இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அவர்களை எப்போதும் எதையாவது செய்யவைக்கும். அந்த இடம் அமைதியாகவும், எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும். இது குழந்தைகளை நேர்மறையான அனுபவங்களுடன் கற்க உதவும்.

பிரச்னைளை தீர்க்கும் திறன்களுக்கு உதவி

உங்கள் குழந்தைகளை சவால்களை தாங்களாகவே சமாளித்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மட்டும் வழங்குங்கள். நீங்களே தீர்வுகளை கொடுத்துவிடாதீர்கள். அவர்களுக்கு பசில்கள், விளையாட்டுகள், டாஸ்குகளைக் கொடுங்கள். அவை அவர்களுக்கு சிந்திக்கவும், பொறுமையாக இருக்கவும், முயற்சி மற்றும் தவறி திருந்துவதையும் கற்றுக்கொடுக்கும். தனியாக அவர்கள் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களுக்கு மீண்டு எழும் திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிந்தனைகளை கூராக்கவும் உதவும்.

திரை நேரத்துக்கு எல்லை

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு திரை காட்டாமல் வளர்க்கவே முடியாது. ஆனால் அதற்கு எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். அதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் திரை நேரத்தை குறைக்கும்போது, அவர்கள் மற்ற வேலைகளை செய்ய முயற்சிப்பார்கள். குடும்பத்தினருடன் பேசுவார்கள், ஹாபிக்களை வளர்த்துக்கொள்வார்கள். அவர்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரித்துக்கொள்வார்கள். சமூகத்திறன்களை அதிகரித்துக்கொள்வார்கள். மன ஆரோக்கியம் பேணுவார்கள்.

உடலை மையப்படுத்திய செயல்பாடுகளை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பயிற்சிகள் மற்றும் விளையாட்டுககளை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் மூளை மற்றும் உடல் இரண்டின் வளர்ச்சிக்கும் ஏற்றது. விளையாட்டு, நடனம் மற்றும் வெளியில் சென்று விளையாடுவது என எது இருந்தாலும், அது கவனம், நினைவாற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துவதாக இருக்கும். நீங்கள் நன்றாக ஓடியாடி விளையாடும்போது, குழற்தைகளுக்கு குழுவேலை கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பொறுமை மற்றும் பழக்கம், முயற்சி என பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

உணர்வு ரீதியான அறிவை வளர்த்தெடுக்கிறார்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை கையாளவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுங்கள். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் பல்வேறு சூழல்களில் எப்படி உரையாடுவார்கள் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது அவர்களின் அனுதாபத்தை வளர்த்தெடுக்கும். இது சமூக உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

வளர்ச்சி மனநிலையை வளர்த்தெடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வழியாக வளர்ச்சி உண்டு என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். பின்னடைவுகளை அவர்கள் சந்திக்கும்போது, அவர்களுக்கு சவால்களை சந்திக்க கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு சவால்களை வாய்ப்புகளாக மாற்ற கற்றுக்கொடுங்கள். அவர்களின் முயற்சிகளை பாராட்டும்போது, அவர்களுக்கு மீண்டும் திறனை வளர்த்தெடுக்கிறது. அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கிறது.

குடும்ப முடிவுகளை எடுப்பதில் அவர்களை ஈடுபடுத்துங்கள்

உங்கள் குழந்தைகளை சிறிய குடும்ப விஷயங்களில் முடிவெடுக்க அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு நம்பிக்கையையும், பொறுப்பையும் வளர்த்தெடுக்கும். குடும்பத்துக்கு தேவையானவற்றை செய்வதாகட்டும் அல்லது உணவை திட்டமிடுவதாகட்டும் அதில் அவர்கள் முடிவெடுக்கலாம். இது அவர்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. அவர்களின் மதிப்பை அதிகரித்துக் காட்டுகிறது. அவர்களுக்கு முடிவெடுக்கும் திறனை கற்றுக்கொடுக்கிறது.

ரோல் மாடலாகுங்கள்

உங்கள் குழந்தைகள் வார்த்தைகளைவிட செயல்களில் இருந்து அதிகம் கற்கிறார்கள். அவர்களுக்கு அன்பு, பொறுமை மற்றும் ஆர்வத்தைக் கற்றுக்கொடுங்கள். இதை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் கற்கட்டும். உங்கள் நடவடிக்கைகள் அவர்களுக்கு வாழ்கையை எப்படி அணுகவேண்டும் என்று கற்கிறார்கள். சவால்களை எதிர்கொள்கிறார்கள். மற்றவர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.