Monday Born People: இயல்பிலேயே அதிர்ஷ்ட நாளில் பிறந்தவர்கள் இவர்கள்..! எதிலும் வெற்றி, ஈரப்பு மையமாக திகழும் நபர்கள்
Monday Born People: இயல்பிலேயே அதிர்ஷ்ட நாளில் பிறந்தவர்களாக திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இவர்கள் எதிலும் வெற்றி பெறுபவர்களாகவும், ஈரப்பு மையமாக திகழும் நபர்களாகவும் இருக்கிறார்கள்.
Monday Born People: ஜோதிட சாஸ்திரப்படி வாரத்தில் திங்கள்கிழமை பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம். அவர்கள் வேலை, வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். தங்களது வாழ்க்கையை வசதியாகவும், செளகரிமயாகவும் அனுபவிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
பிறந்த கிழமை பலன்கள்
ஜோதிடத்தில், நட்சத்திரத்தின் படி நபரின் பிறந்த தேதி உட்பட பல சிறப்பு விஷயங்கள் மூலம் ஒரு நபரின் வாழ்க்கை தொடர்பான பல முக்கியமான விஷயங்களை மதிப்பிடலாம். ஒருவரது பிறந்த நாள், அதாவது அவர் பிறந்த கிழமையானது அந்த நபரின் இயல்பு மற்றும் ஆளுமையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
ஜோதிடத்தின் படி அதிர்ஷ்டசாலிகள்
அந்த நபரின் தொழில் மற்றும் வேலை விருப்பம் முதல் பல்வேறு விஷயங்களை நீங்கள் கண்டறியலாம். அதன்படி வாரத்தின் முதல் நாளாக இருக்கும் திங்கள்கிழமை பிறந்தவர்கள் ஜோதிடத்தின்படி மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள்.
அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானது. தனது நேர்மறையான எண்ணங்களால் அனைவரையும் ஈர்ப்பார்கள்.
திங்கள் கிழமை பிறந்தவர்களின் குணாதிசயங்கள்
ஜோதிட சாஸ்திரப்படி திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் சிவபெருமானைப் போல் எளிமையாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியான சுபாவத்தை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதால், எல்லா சூழ்நிலைகளுக்கும் எளிதில் பொருந்திக்கொள்வார்கள்.
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் கவர்ச்சியாகவும், கண்ணியமாகவும் இருப்பார்களாம். யாருடனும் வாதிடுவதை விரும்பாதவர்களாகவும், மிகவும் அமைதியான இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள்.
தாங்கள் செய்யும் தொழிலில் பெரும் சாதனைகளை அடைவார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இதனால் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்கு உரிய நபர்களாகவும் இருப்பார்கள். பெறுகிறார்கள்.
திறந்த மனதுடன் இருப்பவர்களாக இருக்கும் இவர்கள் எந்த தடைகளையும் விரும்ப மாட்டார்கள். சிலர் திருமண வாழ்க்கை ஏமாற்றத்தை சந்திக்கலாம். பெற்றோரை மிகவும் மதிக்ககூடியவராக இருக்கும் இவர்கள் எங்கு சென்றாலும் ஈர்ப்ப மையமாக திகழ்க்கிறாகள்.
காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை
திங்கள் கிழமை பிறந்தவர்கள் அமைதியானவராக இருந்தாலும், தங்களது கண்களால் பேசும் திறமையை பெற்றவர்களாக உள்ளார்கள். அவர்களின் கண்களை அவர்களை பற்றி ஏராளமாக சொல்லும். இவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி துணையை அன்பாலும், அக்கறையாலும் கட்டிபோடுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதால் ஒரே இடத்தில் நிற்க முடியாமல் போராடுவார்கள்.
இந்த நாளில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆத்மார்த்தமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். கணவன் அல்லது மனைவியாக, அவர்கள் தங்கள் துணையின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தங்கள் துணையின் தேவைகளில் அக்கறை செலுத்துவர்கள். திருமண உறவில் எப்போதும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.
மனநிலையில் ஊசலாட்டம் இருக்கும். இதனால் சின்னச் சின்ன விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்து சண்டை போடுவார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்