அன்னாசிப் பழத்தில் சாஸ் செய்ய முடியுமா? இனி உங்கள் டோஸ்ட்களின் சுவை அதிகரிக்கும்! இதோ பைனாப்பிள் சாஸ் ரெசிபி!
அன்னாசிப்பழ சாஸ் செய்வது எப்படி என்று பாருங்கள்.
அன்னாசி பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. ஒரு கப் அன்னாசிப்பழத்தில், உங்கள் உடலின் தினசரி தேவைக்கான வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீஸ், காப்பர், தியாமின், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், இரும்புச்சத்துக்கள், ரிபோஃப்ளேவின், புரதம், போன்டோதெனிக் அமிலம் ஆகியவை உள்ளது. இதில் 82.5 கலோரிகள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, கே, சிங்க், கால்சியம் மற்றும் ஃபோட்டோஃபோபியா ஆகியவையும் உள்ளது. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மட்டுமல்ல, இவற்றில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இதில் செரிமான எண்சைம்களும் உள்ளது. இதனால் அன்னாசி பழங்கள் செரிமானத்துக்கு ஏற்ற சிறந்த உணவு.
இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழத்தில் சாஸ் செய்யலாம். அது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் – ஒரு கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வினிகர் – கால் கப்
தேன் – கால் கப்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பூண்டு – 2 பல் (துருவியது)
கார்ன் ஃப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
ரெட் சில்லி ஃபேள்க்ஸ் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தண்ணீர் அன்னாசிப்பழம், வினிகர், தேன், சோயா சாஸ், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அன்னாசிப்பழம் நன்றாக மிருதுவாகும் வரை இதை கொதிக்கவிடவேண்டும்.
ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளார் மாவைக் கரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் சாஸில் விடவேண்டும். இது கொஞ்சம் அந்தக்கலவையை கெட்டியாக்கும். இதை அடுப்பில் வைத்து நல்ல கெட்டியாகும் வரை கொதிக்கவிடவேண்டும். நல்ல கெட்டியானவுடன் இதை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். இதை நன்றாக ஆறவிடவேண்டும். ஆறியவுடன் சாஸ் மேலும் திக்காகிவிடும்.
இதை சான்விச், சமோசா, பிரியாணி, நூடுல்ஸ் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அன்னாசி பழத்தின் நன்மைகள்
இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், அன்னாசி பழங்கள் உங்கள் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்தப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது.
உங்களுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், இருமல் மருந்துக்கு பதில், அன்னாசி பழத்தையோ அல்லது அதன் சாறையே எடுத்துக்கொள்ள வேண்டும். இது சளியை குழைத்து இருமலின் வழியே வெளியேற்றுகிறது.
இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. அன்னாசி பழங்களை நாம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களைப் போக்குகிறது.
இது மூட்டுகளில் வீக்கத்தை குறைக்கிறது. அன்னாசி பழத்தில் ப்ரோமலைன் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. ப்ரோமலைன் ஆர்த்ரடிஸ் அறிகுறிகளை போக்கும் தன்மைகொண்டது என்பது ஆய்வுகளில் நிரூகப்பட்டுள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்