’விநாயகர் படம் முதல் துளசி மாடம் வரை!’ உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் டாப் 5 டிப்ஸ்!
வாஸ்து சாஸ்திர படி, வீட்டில் தோஷம் இருக்கும் பட்சத்தில் செல்வம் சேர்ப்பதில் சிக்கல் உண்டாகும். உங்கள் வீட்டில் பணத்தை ஈர்க்க சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றி விவரிக்கும் சாஸ்திரம் ஆக உள்ளது. ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் முறைகளை வேதம் சார்ந்து வாஸ்து விளக்குகின்றது. வீட்டில் வாஸ்து சாஸ்திரம் சரியாக இல்லாவிட்டால் பாதிப்புகளை உண்டாக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால், மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
வாஸ்து சாஸ்திர படி, வீட்டில் தோஷம் இருக்கும் பட்சத்தில் செல்வம் சேர்ப்பதில் சிக்கல் உண்டாகும். உங்கள் வீட்டில் பணத்தை ஈர்க்க சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
விநாயகப் பெருமானின் படம்
வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர் படம் இருப்பது நன்மைகளை கொண்டு வரும். விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலையை வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
துளசி செடி
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடி செல்வம் மற்றும் செழிப்பின் சின்னம். வீட்டின் வடகிழக்கு திசையில் துளசி செடியை வைப்பது வீட்டிற்கு மங்களத்தை கொண்டு வரும். வீட்டில் நேர்மறை ஆற்றை அதிகரித்து பணவரவை கொண்டு வரும் என்பது ஐதீகம்
தீபம் ஏற்றுதல்
வீட்டில் உள்ள பூஜை அறையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றுவது ஐஸ்வரியத்தை கொடுக்கும். அதே போல் பூஜை அறையில் லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை
குபேர் இயந்திரம்
குபேரர் பகவான் செல்வம் மற்றும் செழிப்புக்கு உரிய தெய்வம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடகிழக்கு மூலையானது குபேர பகவானால் நிர்வகிக்கப்படும் என்பது நம்பிக்கை எனவே கழிப்பறைகள், ஷூ ரேக்குகள் அல்லது பருமனான தளபாடங்கள் போன்ற எதிர்மறையான விஷயங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும். செழிப்புக்காக வடக்குப் பகுதியின் வடக்குச் சுவரில் குபேர் யந்திரத்தை பொருத்தலாம்.
லாக்கர்கள்
அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் - நகைகள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்கவும். வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் கதவு திறக்கும் வகையில் லாக்கர்களை வைக்கும்போது நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்