ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்கலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்கலாமா?

ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்கலாமா?

Priyadarshini R HT Tamil
Nov 22, 2024 12:44 PM IST

உங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க பகவத் கீதையில் இருந்து பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்கலாமா?
ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்கலாமா?

மஹஸ்ரீ

அதிக செல்வம் மற்றும் தெய்வீக அருள் அதிகம் பெற்ற என்று பொருள். இந்தப்பெயர் தெய்வீகதன்மைகளான ஞானம், இரக்கம் மற்றும் சுயநலமின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இவற்றைத்தான் கீதை வாழ்வின் பொக்கிஷங்களாகக் கருதுகிறது. பொருள் உடைமையை வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.

நிஷ்கம்

நிஷ்கம் கர்மா என்பதில் இருந்து வந்தது இந்தப்பெயர், கீதையில் இதற்கு அர்த்தம், சுயநலமற்ற செயல் என்று பொருள். இது கடமைகளை எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்வதை குறிக்கிறது. இது தூய்மை மற்றும் மன அமைதியைக் குறிக்கிறது.

அனாகா

அனாகா என்றால் பாவமற்ற அல்லது தூய்மையான என்று பொருள். அனாகா என்பது அசுத்தங்கற்ற மற்றும் உலகுடன் தொடர்புடைய என்று பொருள். ஆன்மீக தூய்மை மற்றும் ஒளியை அடையக்கூடிய என்ற பொருளைத் தருகிறது. இது கீதையின் கூற்றுகள் ஆகும்.

சாத்விகா

சாத்விகா என்றால் மூன்று குணங்களில் ஒன்று என்று பொருள். தூய்மை, நன்மை மற்றும் இனிமை என்ற மூன்று குணங்களின் கலவையானவள் என்று பொருள். சாத்விகா என்பது ஆன்மீக முன்னேற்றம் பெற தேவையானது.

வாரென்யா

வாரென்யா என்றால், அதிக திறமையுள்ள என்று பொருள். வணக்குவதற்கு ஏற்றது என்ற மற்றொரு பொருளையும் தருகிறது. இது வாழ்வின் மேம்பட்ட குணங்கள் என்பதை குறிப்பிடுகிறது. இந்தப்பெயர் கீதையில் சுய முன்னேற்றம் மற்றும் உண்மை என்ற கருத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

அமிர்தன்

அமிர்தா என்பதில் இருந்து அமிர்தன் என்ற பெயர் வந்துள்ளது. அமிர்தம் என்றால், அழியாததன் அமிர்தம் என்று பொருள். இது நித்தியமான வாழ்க்கை என்பதை குறிக்கிறது. இது ஆன்மீக விடுதலை என்ற கீதையின் மையக்கருத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். இது தெய்வீக ஆசிர்வாதம். பிறப்பு இறப்பில் இருந்து பெற்ற விடுதலை என்பதைக் குறிக்கிறது.

திரிதி

திரிதி என்றால் பொறுமை, உறுதி, துணிவு என்று அர்த்தம். இந்த குணங்களை கீதை கொண்டாடுகிறது. சவால்களை எதிர்கொள்ள இந்த குணங்கள் தேவை. நீங்கள் சத்தியத்தின் வழியில் நடக்க இந்த குணம் உதவுகிறது. இது உள் பலம் மற்றும் எதிர்தெழும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.

அனன்யா

அனன்யா என்றால் தனித்தன்மையான மற்றும் ஒப்பிட முடியாத என்று பொருள். இது கடவுளிடம் கொண்ட பக்தி என கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தூய்மை, கவனம் மற்றும் கடவுள் மீது கொண்ட கலையாத உண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.