தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Calcium Deficiency : கால்சிய குறைபாடு இதய நோய்களை ஏற்படுத்துகிறது – ஆராய்ச்சி கூறும் அதிர்ச்சி

Calcium Deficiency : கால்சிய குறைபாடு இதய நோய்களை ஏற்படுத்துகிறது – ஆராய்ச்சி கூறும் அதிர்ச்சி

Priyadarshini R HT Tamil
Aug 01, 2023 12:50 PM IST

Calcium Deficiency : கால்சியம் எலும்புக்கு மட்டும் தேவையில்லை. உங்களின் இதயத்தை வலுப்படுத்தவும் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியமும், இதயமும் நேரடியாக தொடர்புடையவை கிடையாது. ஆனால் இது மிக அவசியம்.

கால்சியம் நிறைந்த உணவு வகைகள்
கால்சியம் நிறைந்த உணவு வகைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கால்சியம் எலும்புகளுக்கு மட்டுமல்ல நம் உடல் முழுவதையும் பராமரிக்க உதவுகிறது.

தசைக்கு கால்சியம் தேவை, எலும்புகள் மற்றும் பற்களுக்கு மட்டுமல்ல தசைகள் இறுகவும் கால்சியம் தேவைப்படுகிறது. நரம்பு, தசையின் செயல்பாடுகளுக்கும் கால்சியம் தேவைப்படுகிறது.

நரம்பு மண்டல செயல்பாட்டுக்கு உதவுகிறது, நரம்பு மண்டலத்தின் கட்டளைகளை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு கால்சியம் உதவுகிறது. நரம்பு மண்டலம் இயல்பாக செயல்பட வழிவகுக்கிறது.

ரத்தம் உறைதலுக்கு உதவுகிறது. சிறுசிறு காயங்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளின்போது ரத்தம் வெளியேறி வீணாகாமல் தடுத்து, உறைய வைத்துவிடுகிறது.

ஹார்மோன்கள் சுரக்க உதவுகிறது, ரத்தச்சர்க்களை அளவை சரிசெய்யும், இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு ஹார்மோன்களும் சுரக்க வழிவகுக்கிறது. பாராதைராய்டு ஹார்மோன் உடலில் கால்சியத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

கால்சியம் குறைபாடு இதய கோளாறுகளை ஏற்படுத்துகிறதா?

கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அமெரிக்காவில் உள்ள சிடார்ஸ் சினாய் என்ற இதய நோய் ஆராய்ச்சிகளை மையம் தெரிவித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் கால்சியம் அதிக பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்தம் உயர்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாகிறது.

கார்டியாக் அரித்மியாஸ்

இதயத்தின் முறையான செயல்பாட்டுக்கு கால்சியம் மிக அவசியம் ஆகிறது. கால்சியம் அளவு சரியாக இல்லையென்றால், அது ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனரி ஆர்டெரி நோய்

கால்சியம் குறைபாடு, கொரோனரி ஆர்டெரி நோயை ஏற்படுத்துகிறது. போதிய கால்சியம் இல்லையென்றால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ‘

எலும்புகளை வலுவிழக்கச்செய்கிறது. நாளொன்றுக்கு 1000 முதல் 1300 வரை மில்லி கிராம் வரை கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்