Heart-Healthy Foods: இதயத்தை பலவீனமாக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்.. தப்பிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும்?
Heart-Healthy Foods: இதயத்தை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் வலுவிழக்கச்செய்யும். இதயம் மற்றும் ரத்த நாள செல்களில் ஃப்ரிராடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், இது உடலில் எண்ணற்ற வளர்சிதை செல்களை உற்பத்தி செய்கிறது.

இதயத்தை வலுவாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க!
இதயநோய்களே பிரதானம்
உலகம் முழுவதும் இதய நோய்கள்தான் அதிக மரணத்துக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அவற்றைத்தடுக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தேவை. ஃப்ரி ராடிக்கல்கள் என்பவை நச்சுக்கள் நிறைந்த உட்பொருட்கள். அவற்றை குறைப்பதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், வீக்கம் மற்றும் இதய நோய் ஆகியவற்றை குறைக்கிறது.
இதயம் என்பது ஒரு முக்கியமான உறுப்பாகும். இதை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் வலுவிழக்கச்செய்யும். இதயம் மற்றும் ரத்த நாள செல்களில் ஃப்ரிராடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், இது உடலில் எண்ணற்ற வளர்சிதை செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் மாசு போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் மற்ற இதய கோளாறுகளும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்பட காரணமாகிறது.