Benefits of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது பாருங்கள்!

Benefits of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jul 14, 2024 11:42 AM IST

Benefits of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது பாருங்கள்!
Benefits of Ghee : கொழுப்பு நிறைந்ததுதான்; ஆனாலும் உங்கள் உடல் எடை குறைக்க நெய் எப்படி உதவுகிறது பாருங்கள்!

வளர்சிதையை ஊக்கப்படுத்துகிறது

உடல் வளர்சிதையை அதிகரிப்பதன் மூலம், உடல் எடையை குறைக்க நெய் உதவுகிறது. அது ஒரு முக்கிய வழியாகும். நெய்யில் மிதமான அளவு டிரைகிளைசரைட்கள் உள்ளது. இதை உங்கள் உடல் விரைவாக உறிஞ்சி, உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நீண்ட அளவு ஃபேட்டி ஆசிட்களைப்போல் அல்லாமல் இவை உடலில் குறைந்தளவு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. 

இது உடலின் ஆற்றலை அதிகரித்து, கலோரிகள் எரிப்பதை அதிகரிக்கிறது. இதனால் உங்களின் உடல் எடை குறைகிறது. நெய் குடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடல் வளர்சிதையையும் ஊக்குவிக்கிறது.

கொழுப்பு எரிக்கும் திறனை மேம்படுத்துகிறது

நெய்யில் உள்ள ஒரு வகை ஃபேட்டி அமிலம், லினோலிக் ஆசிட், இது கொழுப்பை கரைப்பதை மேம்படுத்துகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கிறது. 

கொழுப்பை உடைப்பதன் மூலம் இதைச் செய்கிறது. புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. எனவே உங்கள் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வது உங்கள் உடலில் அதிக கொழுப்புக்களை கரைக்க உதவும். இது ஒட்டுமொத்த கொழுப்பு சதவீதத்தையும் குறைக்கும்.

வயிறு நிறைந்த உணர்வை அதிகரிக்கிறது

நெய், வயிறு நிறைந்த உணர்வை அதிகரிக்கிறது. பசியை குறைக்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. உங்களுக்கு பசிக்காவிட்டாலே நீங்கள் அதிகம் சாப்பிட மாட்டீர்கள். இதனால் உங்கள் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படும். நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், உங்கள் மூளைக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும் ஹார்மோன்களை வெளியிடுகின்றன. 

இதனால் நீங்கள் நெய்யை உணவில் சேர்ப்பது, உங்களுக்கு திருப்தியாக சாப்பிட்ட உணர்வைத்தருகிறது. நீண்ட நேரம் வயறு நிறைவாக இருந்தால், நீங்கள் நொறுக்குத் தீனிகளை கொரிக்கவே மாட்டீர்கள். அடுத்த வேளை உணவையும் அதிகம் உட்கொள்ளமாட்டீர்கள். இதனால் உங்களுக்கு கலோரிகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும்.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடல் எடை மேலாண்மைக்கு, வலுவான செரிமான மண்டலம் காரணமாகிறது. குடல் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் நெய் உதவுகிறது. நெய்யில் உள்ள பட்டிரேட், குறைந்த அளவு ஃபேட்டி ஆசிட் ஆகியவை குடலில் உள்ள செல்களை வலுப்படுத்துகின்றன. வீக்கத்தை குறைக்கின்றன. ஆரோக்கியமான குடல் உங்கள் உடல் உறிஞ்சும் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கிறது.

செரிமான கோளாறுகளை தடுக்கிறது. எடையிழப்பை தடுத்து, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை போக்குகிறது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, செரிமானத்தை அதிகரிப்பதால், நெய் உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் கார்போஹைட்ரேட்களைப்போல் அல்லாமல் நெய் ஆரோக்கியமான கொழுப்பை உடலுக்கு கொடுக்கிறது. இதனால் இனிப்புகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடும் உணர்வைத் தடுக்கிறது. 

இவைதான் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்க சாப்பிடும் உணவுகள் ஆகும். உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றலை நிலையாக வைக்கிறது. இதனால் நீங்கள் தேவையற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவது இல்லை. உங்கள் டயட்டை கட்டுப்படுத்த முடிகிறது.

ஹார்மோன்களை சமப்படுத்துகிறது

உடல் எடையை முறையாக பராமரிக்க ஹார்மோன்கள் அனைத்தும் சமநிலையில் இருப்பது கட்டாயம். இதை செய்வதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே போன்றவை உள்ளன. இது ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் முறைப்படுத்துதலுக்கு மிகவும் அவசியம். 

வைட்டமின் டி இன்சுலின் மற்றும் லெப்டின் உற்பத்திக்கு உதவுகிறது. இவைதான் பசியை கட்டுப்படுத்தவும், கொழுப்பை சேமிக்கவும் உதவும் ஹார்மோன்கள் ஆகும். நெய் இந்த முக்கிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் உடலின் ஹார்மோன்கள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது.

சமையலில் நெய்யை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் பருகும் காபி மற்றும் டீயில் கலந்து பருகலாம். உணவில் மேலே போட்டு சாப்பிடலாம். இனிப்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் நெய்யை அளவாகத்தான் எடுக்கவேண்டும். 

அதிகம் எடுத்தால், அது உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும். இத்தனை நற்குணங்கள் நிறைந்த நெய் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் என்பதால் கட்டாயம் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.