Kambu Idly : உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு இட்லி – ஈசியாக செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kambu Idly : உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு இட்லி – ஈசியாக செய்யலாம்!

Kambu Idly : உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு இட்லி – ஈசியாக செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2023 10:00 AM IST

Kambu Idly : உடலை குளிர்ச்சியாக வைக்கும் கம்பு இட்லி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Kambu Idly : உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு இட்லி – ஈசியாக செய்யலாம்!
Kambu Idly : உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு இட்லி – ஈசியாக செய்யலாம்!

உளுந்து – அரை கப்

வெந்தயம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தோசை ஊற்ற தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்றாக அலசிவிட்டு ஊறவைத்துவிடவேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கம்பை ஊறவைத்துவிடவேண்டும். இரண்டும் ஒரு இரவு ஊறவிடலாம் அல்லது 8 மணி நேரம் கூட போதுமானது.

உளுந்தை, மிக்ஸி அல்லது கிரைண்டரில் நன்றாக அரைத்துவிடவேண்டும். உளுந்து மாவு நன்றாக பஞ்சுபோல் புசுபுசுவென்று வரும் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒஒரு பாத்திரத்தில் இரண்டையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துவிடவேண்டும்.

இதை 8 மணி நேரம் அல்லது ஒரு இரவு அல்லது இரண்டு மடங்கு ஆகும் வரை புளிக்க வைக்க வேண்டும்.

புளித்தவுடன் இந்த மாவை பயன்படுத்தி இட்லி, தோசை, ஊத்தப்பம், குழிப்பணியாரம், வெங்காய ஊத்தப்பம் என எந்த டிஃபன் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

இட்லி செய்ய இட்லி பாத்திரத்தில் வழக்கம்போல் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்ய விரும்பினால், இதில் வெங்காயம், கேரட், கேப்ஸிகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளை உங்களுக்கு பிடித்ததுபோல் சிறிது நறுக்கி சேர்த்து பணியார சட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும். தோசைக்கல்லில் ஊத்தப்பங்களாகவோ அல்லது வெங்காய ஊத்தப்பங்களாகவோ ஊற்றி எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு தேங்காய், தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி என எந்த சட்னி வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். சாம்பார் அல்லது காய்கறி குருமா அல்லது மஸ்ரூம் குருமா என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

கறி, கோழி, மீன், முட்டை என எந்த அசைவ குழம்பையும் இதற்கு தொட்டுக்கொள்ளலாம். அனைத்தும் இந்த இட்லிக்கு பொருத்தமானது.

கம்பு உடலை குளுமைபடுத்தும் தன்மைகொண்டது. இதில் கோடை காலத்தில் கூழ் செய்து குடிப்பது நல்லது. ஆனால் கூழாக ஒரே மாதிரி குடித்துக்கொண்டிருந்தால் போர் அடிக்கும் என்பதால் இதுபோன்ற வெரைட்டி உணவுகளை தயாரித்து சாப்பிடலாம்.

இந்த மாலை ஃபிரிட்ஜில் 3 நாட்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் வழக்கமான இட்லிக்கு பதில் இந்த இட்லி மாவை வாரத்தில் ஒருமுறை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உடலுக்கு குளிர்ச்சியைக்கொடுக்கும்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.