தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of White Onions: வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

Benefits Of White Onions: வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 11:27 AM IST

வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளை வெங்காயம்
வெள்ளை வெங்காயம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய உணவில் மிக முக்கியமான சில பொருட்களில் வெங்காயமும் ஒன்று, பல்வேறு ஆராய்ச்சியின் படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் C, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்ற நுண்ணூட்ட பண்புகள் உள்ளன. இது தவிர, இதில் நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகளும் உள்ளன.

ஆராய்ச்சியின் படி, வெங்காயத்துக்கு ரத்த சர்க்கரையை சமன் செய்யும் திறன் உள்ளது. மறுபுறம், வெள்ளை மற்றும் சிவப்பு வெங்காயம் இரண்டும் சுவையில் ஒரே மாதிரியானவை மற்றும் தேவைக்கேற்ப வெவ்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ இரு வழிகளிலும் சாப்பிடலாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் கொண்டது

வெள்ளை வெங்காயத்தில் சல்பர் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டு,ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன, அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வெங்காயத்தில் ஃபிசெடின் மற்றும் குர்செடின் போன்ற பண்புகள் உள்ளன, அவை கட்டி வளர்ச்சியைத் தடுக்கும்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

செரிமான பிரச்சனைகளை சமாளிக்க வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இது வயிற்றுக்கு ஆரோக்கியமானதாக கூறப்படும் நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளின் பண்புகளைக் கொண்டுள்ளது. வெங்காயத்தில் குறிப்பாக ப்ரீபயாடிக்ஸ் இன்யூலின் போன்ற பல கூறுகள் உள்ளன, அதனை வழக்கமாக உட்கொள்ள உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துகிறது

வெள்ளை வெங்காயம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஏனெனில் இதில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற தாதுக்கள் இரத்த சர்க்கரை மற்றும் குறைந்த ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். வெங்காயத்தில் காணப்படும் குர்செடின் மற்றும் சல்பர் போன்ற சில கலவைகள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.

எலும்புகளை பலப்படுத்துகிறது

வயது ஏற ஏற பெண்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் வர ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை வெங்காயத்தை உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்த நன்மை பயக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதைத் தவிர, வெள்ளை வெங்காயம் ஆன்டி ஆக்சிடென்ட் அளவை அதிகரிக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும் செயல்படுகிறது. எலும்பு தொடர்பான பிரச்னைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெள்ளை வெங்காயத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வெள்ளை வெங்காயத்தில் செலினியம் உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகளில் வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வைரஸ் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை நீக்குவதில் செலினியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்