Benefits of Wearing Silver : கொலுசு, மெட்டி, மோதிரம் என வெள்ளி அணிகலன்கள் உங்களுக்கு உடலுக்கு தரும் அளப்பரிய நன்மைகள்!
Benefits of Wearing Silver : கொலுசு, மெட்டி, மோதிரம் என வெள்ளி அணிகலன்கள் உங்களுக்கு உடலுக்கு தரும் அளப்பரிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வெள்ளி நகைகளை அணிவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? காலம்காலமாக வெள்ளி மற்றும் தங்கத்தில் நகைகளை அணிவதை நாம் வழக்கமாகக்கொண்டுள்ளோம். இது உங்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த நம்பிக்கைகள் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெள்ளியின் தன்மையைப் பொறுத்து அது மாறுபடும். மேலும் வெள்ளி நகைகளை அணிவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ள மேலும் அதிக ஆராய்ச்சிகள் தேவை. வெள்ளியில் செயின்கள், வளையல்கள், மோதிரங்கள், பிரேஸ்லெட்கள், தோடுகள் என எண்ணற்ற நகைகள் உள்ளன. இவை அனைத்தையும் அணிவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள்
வெள்ளி நகைகள் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் கொண்டது. அதை அணியும்போது அந்த இடத்தில் அது எந்த கிருமிகளையும் வரவிடுவதில்லை இதனால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகள் வளர்வதில்லை. வெள்ளி நகைகள் தினமும் அணிய ஏற்றவை. அது நச்சுக்களை கொண்ட நுண்ணுயிர்களுக்கு எதிரான உடலை காக்கிறது. இதனால் நோய்கள், நுண்ணுயிர்கள் நமது அன்றாட வாழ்வில் கலக்காமல் இருக்கச் செய்கிறது.
உணர்வு நலன்
வெள்ளி நகைகளுக்கு உங்கள் மனதை அமைதிப்படுத்தும் குணம் உண்டு. இது உங்களுக்கு உணர்வு நிலைத்தன்மை மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. இதன் அமைதிப்படுத்தும் திறன், உணர்வு ரீதியான பலத்தை அதிகரிக்கிறது. வாழ்வில் சவால்களைச் சந்திக்கும் நபர்களுக்கு வாழ்வை எளிதாக்குகிறது. வெள்ளியில் நெக்லஸ் அணியும்போது அது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட ஆற்றலை எதிர்த்து மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்களின் மனதை அமைதிப்படுத்தி உங்கள் தோற்றத்தை சீராக்குகிறது.
குளிர்ச்சி தன்மை
வெள்ளி நகைகளுக்கு குளிரவைக்கும் தன்மைகள் உள்ளது. இது உங்கள் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இது ரத்தத்தின் வெப்பநிலையை முறைப்படுத்துகிறது. இது உங்களுக்கு மனப்பதற்றம், காய்ச்சல் மற்றும் சரும எரிச்சல் ஆகியவை ஏற்படுவதை தடுக்கிறது. இதன் குணங்கள் காயங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உங்கள் வாழ்வில் அமைதி மற்றும் சவுகர்யத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு நளினத்தைதரும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
வெள்ளி நகைகள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாகங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கி, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆரோக்கிய குறைபாடுகளை குறைத்து, உடலின் திறனை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். சில தொற்றுநோய்களை குணப்படுத்தும். வெள்ளி நகைகள் உடலில் ஆற்றலை அதிகரிக்கும். உங்களுக்கு அழகிய தோற்றத்தையும் தரும்.
கொலுசு
பாதங்களில் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து பாத ஆரோக்கியத்தை பாதுகாக்கும். காலில் துர்நாற்றங்களை போக்கும். கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூட்டு வலிகள் ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கொலுசு அணியவேண்டும். நடக்கும்போது வெள்ளி கொலுசு அணிவது நீங்கள் சமமாக மற்றும் நிலையாக நடக்க உதவுகிறது.
செயின்
கழுத்தில் வெள்ளி செயின் அணியும்போது, ஒருவரின் அழகும், ஸ்டைலும் அதிகரிக்கும். வெள்ளியில் பாக்டீரியாக்களுகு எதிரான குணங்கள் உள்ளது. அது உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படாமல் காக்கும். வெள்ளி செயின்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வீக்கத்தைக் குறைக்கும். இது நோயாளிகளுக்கு நல்லது. வெள்ளியின் குணப்படுத்தும் திறன்கள், மனம் மற்றும் உடல் இரண்டையும் அமைதிப்படுத்தும். உங்களை மனதை ஒருமுகத்தன்மையுடன் வைத்திருக்கும்.
மோதிரம்
வெள்ளியில் மோதிரம் அணியும்போது அது உங்கள் ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும். உங்களுக்கு ஆற்றல், கிரியேட்டிவிட்டி, அன்பு அதிகரிக்கும். உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
மெட்டி
மெட்டி அணியும்போது கருப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்றும், மனஅழுத்தம் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் திருமணமான பெண்கள் மெட்டி அணிவது நல்லது என்று கூறுப்படுகிறது. பொதுவாக வெள்ளி நகைகள் அணிவது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. எனவே அதன் தொற்று கிருமிகளைக் கொல்லும் திறன் மற்றும் மனஅழுத்தைப் போக்கும் குணம் ஆகியவற்றுக்காக அணிந்து வாழ்வில் வளம் பெறுங்கள்.