Benefits of Tender Coconut : ‘ஒன்றா, ரெண்டா நன்மைகள் எல்லாம் சொல்லவே ஒரு கன்ட்ன்ட் போதுமா?’ இளநீரில் என்ன உள்ளது?
Benefits of Tender Coconut : தினமும் இளநீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால், தேடிச்சென்று குடிப்பீர்கள். ஒன்றா, இரண்டா இளநீரில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்.
தினமும் இளநீர் பருகுவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்துகொண்டால் நீங்கள் இளநீரை தேடிச்சென்று பருகுவீர்கள். உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பானம் மட்டும் கிடையாது. இளநீர் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியதும் ஆகும். இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற வகைகளில் நன்மைகளைத்தருகிறது. இது இன்றைய காலத்தில் மிகவும் சிறப்பான தேர்வாக உள்ளது. நீங்கள் தினமும் இளநீரை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கலோரிகள் குறைவு
சர்க்கரை அதிகம் நிறைந்த சோடாக்கள் மற்றும் விளையாட்டுதுறையினர் பயன்படுத்தும் மினரல்கள் கொண்ட தண்ணீரை போலன்றி, இளநீர் இயற்கையில் கலோரிகள் குறைந்த ஒன்று. இதில் உள்ள குளுட்டன் ஃப்ரி குணம்தான் தண்ணீர் சத்து கிடைக்க இதை சிறந்த இயற்கை தேர்வாக மாற்றியுள்ளது. ஒருமுறை குடிக்கும்போது 45 முதல் 60 கலோரிகள் வரை கிடைக்கும்.
சிறுநீரக கற்களை தடுக்கிறது
இளநீர் பருகுவதை வழக்கமாகக்கொண்டால், அது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் தேங்குவதை அது தடுக்கிறது. இளநீர் உங்கள் சிறுநீரகத்தில் கிறிஸ்டல்கள் உருவாவதை குறைக்கிறது. இதுதான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகக் காரணமாக இருக்கும். இளநீர் உடலில் உள்ள நச்சுக்களை குறைக்க மட்டும் உதவாது. இது வலியை ஏற்படுத்தக் கூடிய கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
ஆரோக்கியமான சருமம்
இளநீரில் உங்கள் உடலுக்குள் புகுந்து மாயங்கள் மட்டும் செய்யவில்லை. உங்கள் சருமத்திற்கும் பளபளப்பைத் தருகிறது. இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைப்போக்குகிறது. வயோதி தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது.
பளபளக்கும் மற்றும் அடர்த்தியான கூந்தல்
இளநீரில் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்கும், பளபளக்கும் தன்மை உள்ளது. இளநீரில் இரும்புச்சத்துக்கள், பொட்டாசியச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. இது உங்கள் கூந்தலை அடர்த்தியாக்கி பளபள தோற்றத்தை தருகிறது. இது உள்புறத்தில் இருந்து கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. எனவே தலையில் இளநீரை தேய்த்து அடிக்கடி குளிக்கும்போது அது உங்கள் தலை முடி மற்றும் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
இயற்கை எலக்ட்ரோலைட்கள்
விளையாட்டு வீரர்கள் பருக உகந்த பானம் இளநீர். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த மூன்று எலக்ட்ரோலைட்களும் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இவை மூன்றும் உங்கள் உடலில் சரியான அளவில் இருந்தால்தான் நீங்கள் நீர்ச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று பொருள். இதனுடன் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அது உங்கள் உடலின் மீளும் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
நீங்கள் சில கிலோக்கள் வரை உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கு இளநீர் அதிகளவில் உதவுகிறது. எனவே உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் கட்டாயம் இளநீரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனால் இத உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கு இளநீர் ஒரு நல்ல தேர்வு ஆகும்.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பபவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த பானமாகும். இது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உங்கள் உணவில் இளநீரை சேர்த்துக்கொண்டால் சர்க்கரை உங்கள் உடலில் உறிஞ்சப்படும் அளவை மெதுவாக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இதைச் செய்கிறது. இளநீரில் இருப்பது இயற்கை சர்க்கரைதான். எனவே நீரிழிவு நோயாளிகள் கவலைப்படத்தேவையில்லை.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
இளநீரில் அதிகளவில் பொட்டாசியச்சத்துக்கள் இருப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது. உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகளுள் ஒன்று ஆகும். இதில் உள்ள பொட்டாசியம் அதற்கு எதிர்வினை புரிந்து அதன் பாதிப்புக்களை குறைக்கிறது.
தொடர்புடையை செய்திகள்