Morning Drinks: க்ரீன் டீ முதல் இளநீர் வரை..காலை எழுந்தவுடன் பருகக்கூடிய புத்துணர்வு தரும் 5 பானங்கள்
Morning Drinks: உங்கள் நாளை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் தொடங்க நினைத்தால் இந்த காலை பானங்கள் உங்கள் உடலை உற்சாகப்படுத்தவும், உங்கள் நாள் முழுவதும் நேர்மறையாகவும், ஆற்றலுடன் வைத்து கொள்ளும். காலை எழுந்தவுடன் பருகக்கூடிய புத்துணர்வு தரும் 5 பானங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
நாம் காலைப் பொழுதைத் தொடங்கும் விதம், அன்றைய நாளை சிறப்பானதாக வைத்துக்கொள்ள உதவும். அந்த வகையில் காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன் சீக்கிரம் எழுந்து வொர்க்அவுட்டில் ஈடுபடுபவராக நீங்கள் இருந்தால், படுக்கையில் இருந்து எழுந்து நேரடியாக வேலைக்குச் செல்லும் ஒருவரை விட நீங்கள் சிறந்த நிலையில் இருக்கிறீர்கள்.
காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் சாப்பிடும் உணவு, பருகும் பானம் உடல் ஆரோக்கியத்திலும், உடல் செயல்பாட்டிலும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான காலை உணவு உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட காலை உணவு ஒட்டுமொத்தமாக உங்களை நன்றாக உணர வைக்காது
பலர் படுக்கையை விட்டு எழுந்தவுடன் முதல் பானமாக காபியை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் காபியை காட்டிலும் அதிக ஊட்டமளிக்கும் பானங்கள் இருக்கின்றன. அவை உங்கள் காலை நேரத்தை சிறப்பாகவும், அன்றையை நாளில் உங்களை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடன் வைத்து கொள்கிறது. அந்த வகையில் இரவு தூங்கி காலையில் எழுந்தவுடன் நீங்கள் வெறும் வயிற்றில் பருகினால் நன்மைகளை பெறும் பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்
சூடான எலுமிச்சை நீர்
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாற்றை பிழியவும். இந்த புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானம். இது கலோரிகள் குறைவாக இருப்பதுடன் செரிமானத்துக்கு நன்கு உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
கிரீன் டீ
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும், எடை இழப்புக்கு உதவுவதற்கும் பெயர் பெற்ற கிரீன் டீயில் கேடசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. கலோரி இல்லாத பானமாக்க ஒரு கப் சர்க்கரை சேர்த்திராத கிரீன் டீயை பருகலாம்
இளநீர்
நீங்கள் தவறவிட முடியாத பருவகால விருப்பமாக தேங்காய் நீர் அல்லது இளநீர் உள்ளது. இது உங்கள் வயிற்றை ஆற்றுப்படுத்துகிறது, எலக்ட்ரோலைட்டுகளை சமன் செய்கிறது. உங்களை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருந்து, தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பானமாக உள்ளது.
மூலிகை பானங்கள்
மிளகுக்கீரை, கெமோமில் அல்லது இஞ்சி தேநீர் போன்ற மூலிகைகளை வைத்து ஏதாவது பானங்கள் தயார் செய்து பருகலாம். இந்த கலோரி இல்லாத பானம் செரிமானத்துக்கு உதவுகின்றன. வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகின்றன.
காய்கறி சாறு
குறைந்த கலோரி காய்கறி சாறு தயாரிக்க கீரை, செலரி, வெள்ளரி போன்ற காய்கறிகளை எலுமிச்சை அல்லது இஞ்சியுடன் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறி சாறுகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரேற்றம் நிரம்பியதாக இருக்கும். இது உங்கள் நாளைத் தொடங்க ஒரு திருப்திகரமான வழியாகும்.
இந்த பானங்கள் உங்கள் எடை இழப்பு முயற்சிகளை ஆதரிக்கிறது. சமச்சீர் உணவு டயட், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இணைந்தால் இவை சிறப்பாக செயல்படும்.
உங்கள் உடலின் தேவைகள் பற்றி அறிந்து கொள்வது மற்றும் உங்கள் குறிப்பிட்ட சுகாதார நிலைமைகள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைக்கு ஒரு சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்