Benefits of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள்! சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களின் நம்பமுடியாத நன்மைகள்!-benefits of nithya kalyani medicinal flowers incredible benefits of nitya kalyani flowers blooming by the roadside - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள்! சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களின் நம்பமுடியாத நன்மைகள்!

Benefits of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள்! சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களின் நம்பமுடியாத நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Sep 21, 2024 09:41 AM IST

Benefits of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள். சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களில் உள்ள நம்பமுடியாத நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள்! சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களின் நம்பமுடியாத நன்மைகள்!
Benefits of Nithya Kalyani : மருந்தாகும் மலர்கள்! சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி பூக்களின் நம்பமுடியாத நன்மைகள்!

வேதிப்பொருட்கள்

இந்த பூவில் ரெசெர்பைன், அஜ்மாலிசின், கேதரான்தய்னே, லோச்நெரின், செர்பென்டைன், லோச்நெர்சின், வினோரெல்பைன், வின்காமைன் மற்றும் வின்டெசைன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் இதில் உள்ள வின்சிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் ஆகிய இரு ஆல்கலாய்ட்களும் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பவை. அவை இதில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பூவில் இருந்து வரும் சாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம், கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கின்றன.

ஆயுர்வேத குணங்கள்

கசப்பு தன்மை கொண்டது இந்த மலர்கள். இது வாதம் மற்றும் கப நோய்களை குணப்படுத்துகிறது. காசநோய்க்கு மருந்தாகிறது. உடலில் உள்ள திசுக்களை வலுப்படுத்துகிறது. காயங்களை குணப்படுத்துகிறது. வசிய மருந்தாகிறது.

ஆரோக்கிய நன்மைகள்

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

நீரிழிவு நோய் கபம் அதிகம் ஏற்பட்டால் வருவது, இது உடலில் நெருப்பு மண்டலம் குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் நிலையாகும். நித்யகல்யாணி மலர்களில் உள்ள ஹைப்போகிளைசமின் குணங்கள், ரத்த சர்க்கரையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூக்களின் சாறில் கணையம் சுரக்கச் செய்யும் இன்சுலினின் அளவு அதிகரிக்கும். இது ஸ்டார்ச்சை குளுக்கோசாக்கும் தன்மைகொண்டது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

பூக்களை காயவைத்து பொடியாக்கி காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு, தண்ணீர் அல்லது பழச்சாறில் ஒரு ஸ்பூன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் அது உங்களின் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

இந்த பூக்களை அப்படியே மென்றும் சாப்பிடலாம். திடீரென உயரும் சர்க்கரை அளவை இது குறைக்கும். பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இந்த கசப்பான பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், அது உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

சுவாச கோளாறுகள்

நித்ய கல்யாணி மலர்கள் கபம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. இந்த பூக்களில் உள்ள குணங்கள் ஆஸ்துமா, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு சுவாச மண்டல கோளாறுகளை குணப்படுத்துகிறது. உங்கள் சுவாச மண்டலத்தில் படிந்துள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றுகிறது. மேலும் தொண்டை கம்மல் மற்றும் இருமலை குணப்படுத்துகிறது.

உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்ததை இது இயல்பாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்த நிலைகளை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நித்யகல்யாணி தேநீர் பருகுங்கள்.

மூளை திறனை அதிகரிக்கிறது

நித்ய கல்யாணி மலர்களில் மூளை இயக்கத்தின் திறன்களை அதிகரிக்கச் செய்யும் குணங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள், நினைவாற்றல் திறன், கவனம், அமைதி மற்றும் ஈடுபாடு, எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. மூளைக்கான டானிக்காகவும், மூளையைத் தூண்டும் ஊக்கியாகவும், இது செயல்படுகிறது. நித்யகல்யாணி மலரின் சாறை பருகியவர்களுக்கு அது நினைவாற்றலை அதிகரித்து உள்ளது. பிரச்னைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்ட மூளையின் திறனை அதிகரித்துள்ளது. நினைவாற்றல் இழப்பை இந்த பூவில் உள்ள நரம்பிய பாதுகாப்பு மையங்கள் காக்கின்றன. மூளையின் வயோதிகத்தை மெதுவாக்கி, மூளைக்கு ரத்த ஒட்டத்தை அதிகரித்து, மூளை திசுக்கள் மற்றும் மூளையில் டென்சனை குறைக்கச் செய்யும்.

சரும ஆரோக்கியம்

நித்யகல்யாணி மலர்களில் ஆல்கலாய்ட்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உட்பொருட்கள் உள்ளன. இது சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்களைப் போக்குகிறது. இது கருவளையம், முகச்சுருக்கம் உள்ளிட் பல்வேறு சரும பாதிப்புக்களை குணப்படுத்துகிறது. இது என்சைமா உள்ளிட்ட சரும நோய்களுக்கும் தீர்வாகிறது. முகப்பருக்களை நீக்கி பளபளக்கும் சருமத்தை தருகிறது.

நித்யகல்யாணி மலர்கள், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை பன்னீரில் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் தடவினால், அது உங்கள் முகத்துக்கு நன்மையைத் தரும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். இது உங்களின் முகப்பருக்கள் மற்றும் சரும தொற்றுகளை குணப்படுத்தும்.

மாதவிடாய் உதிரப்போக்கை முறைப்படுத்துதல்

மாதவிடாய் பிரச்னைகளால் எண்ணற்ற பெண்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒழுங்கற்ற அல்லது சீரற்ற மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு மாதவிடாயை முறைப்படுத்தவும், கருவுறுதலுக்கு முந்தைய பிரச்னைகளை தீர்க்கவும், அதிகப்படியான உதிரப்போக்கு, மாதவிடாய் வலி ஆகியவற்றை குணப்படுத்த நித்யகல்யாணி மலர்கள் உதவுகிறது. வலியைக் கட்டுப்படுத்தி, மாதவிடாய் உதிரப்போக்கை முறைப்படுத்துகிறது. பிசிஓடி பிரச்னைகள் உள்ள பெண்கள், இந்த பூக்களின் சாறை பருகிவந்தால், அது ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. கருப்பை ஆரோக்கியம், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஏற்பட வழிவகுக்கிறது.

மலர்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தேநீரை பருகிவந்தால் போதும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

காயங்களை குணப்படுத்தும் தன்மை

நித்யகல்யாணி மலர்களின் காயங்களை குணப்படுத்தும் தன்மை, காயங்களை நன்றாக குணப்படுத்துகிறது. சரும தொற்றுகளை தடுக்கிறது. மலர்களின் இதமான தன்மை, சரும அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்குவதுடன், காயங்களால் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்கிறது. காயத்தின் மீது இந்த பூக்களை அரைத்து பூசினால் அது விரைந்து குணப்படுத்தும்.

புற்றுநோயை தடுக்கும்

நித்ய கல்யாணி மலர்களில் உள்ள புற்றுநோக்கு எதிரான குணங்கள், ஆன்டிமெட்டாஸ்டேடிக் மற்றும் ஆன்டிமியூட்டாஜெனிக் குணங்கள், இதன் இலைகள் மற்றும் பூக்களை அதற்கு சிறந்த தீர்வாக மாற்றுகிறது. இந்த மலர்கள் சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, கட்டியின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மேலும் பரவாமல் தடுக்கிறது. இதில் உள்ள வினகிரிஸ்டைன் மற்றும் வின்ப்ளாஸ்டைன் ஆகிய உட்பொருட்கள் ரத்த புற்றுநோய்க்கு தீர்வாகிறது.

இதை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது மிகவும் அவசியம். இதை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, அது மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் எடுக்கும்போது மருத்துவரின் அறிவுரை கட்டாயம் தேவை.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.