Health Drinks: எடை குறைப்பு முதல் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு வரை..கருவேப்பிலை பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்-5 health reasons to drink curry leaves water control diabetes to weight loss - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Drinks: எடை குறைப்பு முதல் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு வரை..கருவேப்பிலை பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Health Drinks: எடை குறைப்பு முதல் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு வரை..கருவேப்பிலை பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Sep 18, 2024 01:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 18, 2024 01:15 PM , IST

  • உணவின் சுவையை அதிகரிப்பதில் கறிவேப்பிலை முக்கிய உணவு பொருளாக உள்ளது. அதேபோல் கறிவேப்பிலை தண்ணீரும் உடல் எடையை குறைப்பது முதல் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டதாக உள்ளது.

கறிவேப்பிலை உணவுக்கு சுவையையும் மணத்தையும் சேர்க்கிறது. பருப்பு, சட்னி சாம்பார் முதல் சாதம், கூட்டு, பொறியல் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தக்கூடிய கருவேப்பிலையை அப்படியே சாப்பிட்டலாம்.அதே போல் அதை தண்ணீருடன் சேர்த்து அறைத்து அல்லது தண்ணீரில் காய்ச்சி  பருகலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு பல அற்புதமான நன்மைகளைத் தருகின்றன

(1 / 8)

கறிவேப்பிலை உணவுக்கு சுவையையும் மணத்தையும் சேர்க்கிறது. பருப்பு, சட்னி சாம்பார் முதல் சாதம், கூட்டு, பொறியல் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தக்கூடிய கருவேப்பிலையை அப்படியே சாப்பிட்டலாம்.அதே போல் அதை தண்ணீருடன் சேர்த்து அறைத்து அல்லது தண்ணீரில் காய்ச்சி  பருகலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு பல அற்புதமான நன்மைகளைத் தருகின்றன(shutterstock)

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் நார்ச்சத்து, இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருள்களுடன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

(2 / 8)

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் நார்ச்சத்து, இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருள்களுடன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்(shutterstock)

கறிவேப்பிலையில் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாடு பண்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்

(3 / 8)

கறிவேப்பிலையில் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாடு பண்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்(shutterstock)

கறிவேப்பிலை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் ஏராளமாக இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற பருவகால நோய்களில் இருந்து விலக்கி வைக்கிறது

(4 / 8)

கறிவேப்பிலை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் ஏராளமாக இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற பருவகால நோய்களில் இருந்து விலக்கி வைக்கிறது(shutterstock)

விரைவாக உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கிறது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பதால் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. அதன் நீர் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது

(5 / 8)

விரைவாக உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கிறது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பதால் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. அதன் நீர் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது(shutterstock)

கறிவேப்பிலை நீரில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஹீமோகுளோபின் அளவை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது

(6 / 8)

கறிவேப்பிலை நீரில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஹீமோகுளோபின் அளவை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது(shutterstock)

கறிவேப்பிலை செரிமான சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள நல்ல அளவு நார்ச்சத்து பல இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வீக்கம் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது

(7 / 8)

கறிவேப்பிலை செரிமான சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள நல்ல அளவு நார்ச்சத்து பல இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வீக்கம் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது(shutterstock)

கறிவேப்பிலை தண்ணீர் தயாரிக்க, சுமார் 250 மில்லி தண்ணீரில் 30 கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கவும். இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது ஆற வைக்கவும். நீங்கள் விரும்பினால், வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்தி இனிப்பு சேர்த்து குடிக்கலாம்

(8 / 8)

கறிவேப்பிலை தண்ணீர் தயாரிக்க, சுமார் 250 மில்லி தண்ணீரில் 30 கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கவும். இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது ஆற வைக்கவும். நீங்கள் விரும்பினால், வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்தி இனிப்பு சேர்த்து குடிக்கலாம்

மற்ற கேலரிக்கள்