Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே!
Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே கொடுப்பட்டுள்ளன. செய்து பலன்பெறுங்கள்.

சந்திர நமஸ்காரத்தின் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள். சூரிய நமஸ்கார யோக முறை மிகவும் பிரபலமான ஒன்று. முழுமையான யோகா செய்யாவிட்டாலும், சூரிய நமஸ்காரம் மட்டுமே தினமும் 50 முறை செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று யோகா வல்லுனர்கள் கூறுகிறார். சந்திர நமஸ்காரத்தால் எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்.
சந்திர நமஸ்காரம் என்றால் என்ன?
சந்திர நமஸ்காரம் அல்லது ஆங்கிலத்தில் மூன் சலுட்டேசன் என்பது ஒரு யோகா நிலை, அது உங்கள் உடல் மற்றும் மனதுக்கு தேவையான அமைதியைக் கொடுக்கிறது. இதை நீங்கள் மாலை நேரத்தில் செய்யும்போது, நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. மனஅமைதியை ஏற்படுத்துகிறது. சந்திர நமஸ்காரத்தின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
சந்திர நமஸ்காரம் மூச்சுத்திறன் சிறக்க உதவுகிறது. இதனால் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. உங்கள் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் குறைகிறது. இது உங்களுக்கு டென்சனைக் குறைக்கிறது மேலும் மன அழுத்தத்தையும், உடல் அழுத்தத்தில் இருந்தும் உங்களைக் காக்கிறது.