Magaram Rasipalan: பிறந்தது ஜூலை! உக்கிர செவ்வாய் உடன் சேர்ந்த சந்திரன்! மகர ராசிக்கு அடிக்கிறது யோகம்!
Magaram Rasipalan: ஜூலை 1ஆம் தேதி தசமியாக உள்ளது. பொதுவாக தசமியில் தொடங்க கூடிய விஷயங்கள் வெற்றியில் முடியும் என்பது ஜோதிட நம்பிக்கை ஆகும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றிகரமாக முடியும். இந்த வாரம் வரும் ஏகாதேசியில் திருமால் வழிபாடு மேற்கொள்ள நன்மைகள் கிட்டும்.

மகரம் ராசிக்கு இந்த வாரம் சந்திரன் 4ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் இணைந்து உள்ளார். இதன் மூலம் சந்திரன், செவ்வாய் உடன் இணைந்து தரும் யோகம் நிலம் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த யோகத்திற்கு சந்திர மங்கள யோகம் என்று பெயர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
குரு மங்கள யோகம்
அதன் பிறகு ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் மூலம் குரு மங்கள யோகம் மகர ராசிக்கு கிடைக்கும். இதனால், குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைப்பது, தொழிலில் முன்னேற்றம் மற்றும் லாபம், நிலம் சார்ந்து தன லாபம் ஏற்படுதல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்
இந்த வார இறுதியில் லட்சுமி நாரயண யோகமும் மகரம் ராசிக்கு உண்டாகின்றது. சந்திரன் தனது சொந்த வீட்டுக்கு சென்று ஆட்சி பெறுவதன் மூலம் இந்த யோகம் உண்டாகின்றது. இதால், பெரும் லாபம், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மகரம் ராசிக்காரர்கள் ஏழரை சனி காலத்தில் உள்ளதால், தற்போது உள்ள கிரகங்கள் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கும். சனி இரண்டாம் இடத்தில் மூலத் திரிகோணத்துடன், வக்ரம் பெற்று உள்ளது. இந்த நேரத்தில் வீண் விரையம் மற்றும் வெட்டி பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.