Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? இது மட்டும் ஒரு ஸ்பூன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? இது மட்டும் ஒரு ஸ்பூன்!

Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? இது மட்டும் ஒரு ஸ்பூன்!

Priyadarshini R HT Tamil
Jul 10, 2024 11:12 AM IST

Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? தேனை இதுபோல் செய்து ஒரு ஸ்பூன் மட்டும் பருகி வந்தால் போதும். அது என்னவென்று பாருங்கள்.

Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? இது மட்டும் ஒரு ஸ்பூன்!
Immunity Booster : பாக்டீரியா, வைரஸ்களை அடித்து விரட்ட நோய் எதிர்ப்பை அதிகரிக்கணுமா? இது மட்டும் ஒரு ஸ்பூன்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே ஒரு நல்ல ஆன்டிபயோடிக்கை நீங்கள் தயாரிக்க முடியும். இதில் ஒரு ஸ்பூன் தினமும் பருகினாலே போதும், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். 

மேலும் உங்கள் உடலில் உள்ள இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை அடித்து விரட்டும்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

குயர்சடின் என்ற உட்பொருள் வெங்காயத்தில் உள்ளது. இது சளி மற்றும் இருமலைப் போக்கக்கூடிய திறன் பெற்றது. ஆஸ்துமா, டான்சில்ஸ், அலர்ஜி போன்ற அனைத்தையும் இயற்கையாகவே போக்கும் தன்மை கொண்டது.

பூண்டு – 4 துண்டுகள் (நறுக்கியது)

பூண்டை நறுக்கும்போது அதிலிருந்து வெளிவரும் தண்ணீரில் அலிசின் என்ற உட்பொருள் உள்ளது. அது ஒரு சல்ஃபர் உட்பொருள் ஆகும். அது நுண்ணுயிர்களுக்கும் வைரஸ்களுக்கும் எதிராக செயல்படக்கூடியது. பூண்டு, நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்ய உதவுகிறது.

தேன் – 12 ஸ்பூன்

தேன், சுவாசப்பாதையில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவல்லது. விரைவாக இருமலைப்போக்கும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு மற்றும் தேன் கலந்து ஓரிவு ஊறவைத்துவிடவேண்டும். காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். ஓரிரவு இல்லாவிட்டால் குறைந்தபட்சம் 6 மணி நேரம் கட்டாயம் ஊறியிருக்கவேண்டும்.

 இந்த கலவையை நன்றாக ஸ்பூன் வைத்து கலந்துவிடவேண்டும். பூண்டு மற்றும் வெங்காயத்தின் சாறுகள் முற்றிலும் நன்றாக தேனில் ஊறியிருக்கவேண்டும்.

அடுத்த நாள் காலையில் இவற்றை வடிகட்டிக்கொள்ளவேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டின் சாறுகள் தேனில் நன்றாக இறங்கியிருக்கும். பெரியவர்கள் என்றால் ஒரு டேபிள் ஸ்பூனும், சிறியவர்கள் ஒரு டீஸ்பூனும் சாப்பிடவேண்டும்.

இதை நீங்கள் உறங்கச்செல்வதற்கு முன்னர் செய்யவேண்டும். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்துகொள்ளலாம். இதை சாப்பிட துவங்கியது முதலே உங்கள் உடலில் நல்ல வித்யாசம் தெரியும். கட்டாயம் இதை செய்து நீண்ட ஆயுளுடன் வாழ ஹெச்.டி. தமிழ் வாழ்த்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.