Benefits of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; வேறு நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; வேறு நன்மைகள் என்ன?

Benefits of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; வேறு நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 10:11 AM IST

Benefits of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; பாலியல் உணர்வுகளைத் தூண்டும். இதன் வேறு நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; வேறு நன்மைகள் என்ன?
Benefits of Jackfruit Seeds : கல்லீரல் மற்றும் பித்தப்பையை வலுப்படுத்த உதவும் பலாக்கொட்டைகள்; வேறு நன்மைகள் என்ன?

பலாக்கொட்டையின் நன்மைகள்

வாயுத்தொல்லைகளை போக்க உதவுகிறது. இதற்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை உதவுகிறது.

பலாக்கொட்டைகளின் சாறு தண்ணீராகவும், ரத்தம் மற்றும் சளியுடன் கழியும் மலத்தை சரிசெய்ய உதவுகிறது. வயிற்றுக்குள் உள்ள தொற்றுக்களை போக்குகிறது.

வறுத்த பலாக்கொட்டைகள், பாலுணர்வை உண்டாக்கும்.

ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

வலி மற்றும் எலும்பு பலவீனத்தைப் போக்கும்.

நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்றுக்களை போக்குகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது

உடல் இயங்குவதற்கு மெக்னீசியம் ஒரு முக்கிய மினரல் ஆகும். உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். கால்சியத்தை உடல் உறிஞ்ச செய்யும். கால்சியம் நமது எலும்புகளை வலுவாகவும், நேராகவும் வைத்து, அதன் இயக்கம் சரியாக இருக்க உதவிசெய்யும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் உள்ள மெக்னீசியமும், கால்சியமும் எலும்புகளை வலுவடையச் செய்யும். எலும்பு பிரச்னைகளை குணப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தும்.

உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது

நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரி ராடிக்கல்களை குறைக்கும் ஆற்றல் ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்கு உள்ளது. பலாக்கொட்டையில் நல்ல அளவு அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காலிக் அமிலம் உள்ளது. 

இது உடலுக்கு அதிகப்படியான ஃப்ரி ராடிக்கல்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் காக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட் நடவடிக்கைகளைப் போக்குகிறது. பலாக்கொட்டை உடலின் ஆன்டிஆக்ஸிடன்ட் வேலைகளுக்கு பங்களிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது

பலாக்கொட்டை, எஸ் அரேயஸ், ஈகோலி மற்றும் மெகாட்டேரியம் போன்ற பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும். நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்களைக் பலாக்கொட்டைகளைக் கொண்டுள்ளது. தொற்றுக்களைப் போக்க உதவுகிறது. பலாக்கொட்டைப் பொடி, உணவு நஞ்சாகமால் காக்கிறது. பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் கொண்டது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோயைத் தடுக்க ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் என்று விலங்கு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே பலாக்கொட்டைகள் ரத்தச்சர்க்கரை அளவை குறைக்கின்றன என்பதை நினைவில்கொள்வது அவசியம்.

புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக பலாக்கொட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

பலாக்கொட்டை பொடியில் உள்ள லெக்டின், ஹெச்.ஜ.வி தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது.

உடலுக்கு ப்ரிபயோடிக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துக்களும், உடலுக்கு குளுமையையும் வழங்கக்கூடியது பலாக்கொட்டை.

மிட்டாய்கள், ஸ்னாக்ஸ் பார்களில் புரதச்சத்துக்களுக்காக பலாக்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் தயாரிக்கும்போது நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சமையல் நேரத்தை குறைக்க உதவுகிறது. தக்காளி சாஸ்களிலும், பேக்கரி உணவுகளிலும், பேப்பர் மற்றும் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளிலும், காய்கறிகள், இனிப்புகள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.