ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்!
By Marimuthu M Sep 03, 2024
Hindustan Times Tamil
ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கு ஒருவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உதவிகரமாக இருப்பது என்பது ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப் என்பதற்கான அறிகுறியாகும்.
ரிலேஷன்ஷிப்பில் நம் துணைக்கு நமக்குப் பிடிக்காத சில விஷயங்கள் பிடிக்கலாம். அதற்கு மதிப்பளித்து, அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றால் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் பேசும்போது மற்றொருவர் நன்கு கேட்பவராக இருந்து, அதில் ஆலோசனை கூறுபவராக இருக்கலாம். அந்த ஆலோசனையின்
படி சில மாற்றங்களும் நடந்தால் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்கள்.
ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் உங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் விஷயத்தை முதலில் நீங்கள் செய்பவராக இருந்தால், அதுவும் மறுமுனையில் இருந்து பலன்களைத்
தந்தால் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று பொருள்.
தம்பதிகளுக்கு இடையே சண்டை வந்து இருக்கும். சில நொடிகளில், அது நடந்த தடயம் தெரியாமல் பேசத்
தொடங்கினால், அதற்கு எதிர்துணை பதிலளித்து சுமுகமானால் ஆரோக்கியமான உறவில் உள்ளீர்கள்.
உங்களுடன் சண்டை செய்த எந்தவொரு விஷயத்தையும், உங்களது பெர்ஷனல்களை, கோபத்தை, கருத்து முரண்களை எதிர்துணை தங்கள் குடும்பத்தில் தெரிவிக்கவில்லை என்றால் அது ஆரோக்கியமான உறவில் இருப்பதற்கான அறிகுறி
உடல் நெருக்கத்தை இருவரும் அறிந்து ஒருவருக்கு நேரம் ஒதுக்கி மகிழ்ந்து இருந்தால், அது ஆரோக்கியமான உறவில் இருப்பதற்கான அறிகுறிகள்.
ஒருவருக்கு ஒருவர் பாராட்டுதல், நன்றி கூறல்,ஸாரி சொல்லுதல் ஆகியவற்றை இருவரும் செய்தால், அது ஒரு ஆரோக்கியமான உறவு ஆகும்.
இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் தரித்திரம் உறுதி! எதிர்மறையாற்றல் அதிகரிக்கும்!