Vijay Makkal Iyakkam: என்ன விளம்பரமா? - விஜய் மக்கள் இயக்கத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Makkal Iyakkam: என்ன விளம்பரமா? - விஜய் மக்கள் இயக்கத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Makkal Iyakkam: என்ன விளம்பரமா? - விஜய் மக்கள் இயக்கத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Aarthi V HT Tamil Published Dec 07, 2023 05:02 PM IST
Aarthi V HT Tamil
Published Dec 07, 2023 05:02 PM IST

விஜய் மக்கள் இயக்கம் செய்த செயல் பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

இடைவிடாது கொட்டி தீர்த்த இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வேண்டிய உதவிகளை அரசுடன் தன்னார்வலர்களாக இணைந்து செய்யுமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதில், “ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர், உணவின்றி போதிய அடிப்படை வசதியுமின்றி தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூல வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இந்த வேளையில் மக்கள இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்க்ும் மீட்பு பணிகலில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் “ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம், விஜய் ஆணைக்கு இணங்கள் பொது மக்களுக்கு உதவி செய்து வருகிறது. உணவு, நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது.

இதனிடையே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முதியோர்களுக்கு உணவு வழங்கி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உணவு கொடுத்து வரும் நிலையில் ஒரு நபர் விஜய்யின் புகைப்படத்தை பிடித்தவாறு நடந்து செல்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், எதற்காக இந்த விளம்பரம் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.