Siachen Battlefield: உலகின் உயரமான போர்க்களம்..! சியாச்சினில் இந்தியா ராணுவப்படை அமைந்து 40 ஆண்டுகள் நிறைவு
ஆபரேஷன் மேகதூத் என்ற பெயரில் தான் முதல் முறையாக சியாச்சின் பினிப்பாறை பகுதியில் இந்திய ராணுவம் தனது படையை நிறுவியது. அந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.
உலகின் மிகவும் உயரமான போர்க்களம் என்று கூறப்படும் சியாச்சினில், இந்த தனது ராணுவ படைகளை பாதுகாப்பு பணிகளில் அமர்த்தி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மிகக் கடுமையான குளிரும், கடல் மட்டத்தில் இருந்து 5,753 மீ (18,875 அடி) உயரமும் கொண்ட இந்த சியாச்சின் பனிமலை பகுதியில் கனரக லிஃப்ட் ஹெலிகாப்டர்கள், தளவாட ட்ரோன்களைச், அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் இந்த தடங்களுக்கான வலையமைப்பை அமைப்பது என வலிமைமிக்க போர்க்களத்தை இந்திய இங்கு கட்டமைத்துள்ளது
40 ஆண்டுகள் நிறைவு
கடந்த 1984, ஏப்ரல் 13ஆம் தேதி சியாச்சின் பனிமலை பகுதிகளில் ஆபரேஷன் மோக்தூத் என்ற பெயரில் இந்திய ராணுவம் முதல் முறையாக தனது படையை அமைத்து அங்கு முழு கட்டுப்பாட்டையும் நிறுவியது.
இதையடுத்து இந்த பகுதியில் இந்திய ராணுவம் நிறுவப்பட்டு இன்று 40 ஆண்டுகள் ஆகியுள்ளது.
காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக இருந்து வருகிறது. இங்கு பணியில் இருக்கும் வீரர்கள் உறைபனி மற்றும் அதிக காற்றை எதிர்த்துப் போராட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"சியாச்சின் பனிப்பாறை பகுதிகளில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு, இணையற்ற வீரம் மட்டும் போற்றுவதாக இல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தளவாட மேம்பாடுகளின் நம்பமுடியாத பயணத்தையும் குறிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதன் காரணமாக படையின் செயல்பாட்டுத் திறன்களில் விரிவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேபோல், "டிஆர்டிஓ உருவாக்கிய ஏடிவி பாலங்கள் போன்ற கண்டுபிடிப்புகள் ராணுவத்துக்கு இயற்கை தடைகளை சமாளிக்க உதவியுள்ளன. வான்வழி கேபிள்வேக்களில் உயர்தர "டைனீமா" கயிறுகள் மிகவும் தொலைதூர புறக்காவல் நிலையங்களுக்கு கூட தடையற்ற விநியோக பாதைகளை உறுதி செய்கின்றன என்று மற்றொரு அதிகாரி கூறினார்
சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி
கடந்த ஆண்டு ஜனவரியில், ராணுவத்தின் பொறியாளர் படையைச் சேர்ந்த கேப்டன் ஷிவா செளகான், சியாச்சின் பனிப்பாறையில் ஒரு முன்னணி பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இதன் மூலம் சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
சியாச்சினில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) டெலிமெடிசின் முனைகளை நிறுவியுள்ளது, அவை துருப்புக்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்கள் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியமான மருத்துவ உதவியை வழங்குகின்றன.
பார்த்தபூரில் உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை முகாமில் சில சிறந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதிநவீன HAPO அறைகள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் வாழ்க்கை ஆதரவு அமைப்புகள் உள்ளன. இந்த சவாலான நிலப்பரப்பில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை இது உறுதி செய்துள்ளது" என்று மூன்றாவது அதிகாரி கூறினார்.
HAPO (உயர் உயர நுரையீரல் வீக்கம்) அறை என்பது ஒரு உயிர் காக்கும் சாதனமாகும், இது மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரலில் திரவங்கள் குவிவது தொடர்பான மருத்துவ நிலைமைகளில் அவசர சிகிச்சையை வழங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்