தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மிகப்பெரிய வெற்றி கண்ட அற்புத கதை.. சிறந்த தொழில்நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு குழந்தையும் தெய்வமும்

மிகப்பெரிய வெற்றி கண்ட அற்புத கதை.. சிறந்த தொழில்நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு குழந்தையும் தெய்வமும்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 19, 2023 05:45 AM IST

Kuzhandaiyum Deivamum: குழந்தையும் தெய்வமும் திரைப்படம் வெளியாக இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகின்றன.

குழந்தையும் தெய்வமும்
குழந்தையும் தெய்வமும்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏவிஎம் நிறுவனத்தின் படைப்புகள் அனைத்தும் அன்று முதல் இன்று வரை மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளன. ஏவிஎம் ப்ரொடக்ஷன் எம்.குமரன் அமெரிக்க திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு அதன் மீது ஈர்ப்பு கொண்டு இதனை தமிழில் உருவாக்க முடியுமா என யோசித்துள்ளார்.

பலரையும் அழைத்து இந்த திரைப்படத்தை பார்க்க வைத்து இதனை தமிழில் படமாக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார். அப்போது விவாகரத்து குறித்து யாருக்கும் அந்த அளவிற்கு தெரியாது. அது எப்படி சாத்தியமாகும் என வளரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்குப் பிறகு திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி குழந்தையும் தெய்வமும் என்று பெயர் வைத்து கிருஷ்ணன் பஞ்சுவை வைத்து இயக்க முற்பட்டார். அதற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கரை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளனர். அப்போதே இந்த திரைப்படத்திற்காக ஜெய்சங்கர் பத்தாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

இரட்டை குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடிகை குட்டி பத்மினி நடித்திருப்பார். இரண்டு உடலை வைத்து, இரண்டு திரையை வைத்து இரட்டை கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். சிறுவயதிலேயே இரட்டை கதா பத்திரத்தை தனித்தனியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தியவர் நடிகை குட்ட பத்மினி.

இந்த திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் எட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வாலி மற்றும் கண்ணதாசன் இருவர்களும் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பிரிந்து விடுகின்றனர் அந்த இரண்டு குழந்தைகளும் எப்படி நாடகமாடி தனது தாய் தந்தையை சேர்க்கிறார்கள் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதையாகும்.

திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றி இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள். ஒரு குழந்தையை இரட்டை கதாபாத்திரமாக்கி பார்ப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் சரியான முறையில் திரையில் காட்டிய முழு பாராட்டுகளும் ஏவிஎம் நிறுவனத்தைச் சேரும்.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 58 ஆண்டுகள் ஆகின்றன. சரியான திரைக்கதைக்கும், திறமையான தொழில்நுட்பத்திற்கும் என்றுமே இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு தான்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்