Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை! ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை! ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை! ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

Priyadarshini R HT Tamil
Jun 24, 2024 02:03 PM IST

Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும் என்பதால் அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை! ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும்!
Beetroot Kola Urundai : குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ருட் கோலா உருண்டை! ருசியுடன் ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4

பொட்டுக் கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 5 பல்

இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன்

உடைத்த முந்திரி – 10

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், வரமிளகாய், பூண்டு, முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் பீட்ரூட், தேங்காய், மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து கோலா உருண்டை சைஸில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். 

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு சீராக எல்லா புறமும் திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவேண்டும்.

ருசியான பீட்ரூட் கோலா உருண்டை தயார். காரமான சட்னி அல்லது சாஸ்களுடன் பரிமாறவேண்டும்.

சாப்பாட்டுக்கு சைடிஷ் ஆகவும், டீ காபியுடன் சிற்றுண்டியாகவும் ருசிக்கலாம். குழந்தைகளுக்கு சத்தான ஸ்னாக்ஸ். தயிர் சாதத்திற்கு சூடாக இதை தொட்டுக் கொண்டால் மிகப் பிரமாதமாக இருக்கும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

பீட்ரூட்டின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது.

பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள

உடலுக்கு தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் பட்டியலில் பீட்ரூட் உள்ளது.

எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள். எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. கட்டாயம் பீட்ரூட்டில் இந்த கோலா உருண்டையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.