பீட்ரூட் கோலா உருண்டை; குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிவாங்க! எவ்வளவு செஞ்சாலும் காலியாகிவிடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பீட்ரூட் கோலா உருண்டை; குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிவாங்க! எவ்வளவு செஞ்சாலும் காலியாகிவிடும்!

பீட்ரூட் கோலா உருண்டை; குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிவாங்க! எவ்வளவு செஞ்சாலும் காலியாகிவிடும்!

Priyadarshini R HT Tamil
Dec 02, 2024 01:29 PM IST

பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி?

பீட்ரூட் கோலா உருண்டை; குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிவாங்க! எவ்வளவு செஞ்சாலும் காலியாகிவிடும்!
பீட்ரூட் கோலா உருண்டை; குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிவாங்க! எவ்வளவு செஞ்சாலும் காலியாகிவிடும்!

பீட்ரூட்டின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது.

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது.

பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2 (தோல் சீவி துருவியது)

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 4

வரமிளகாய் – 5

பொட்டுக் கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 5 பற்கள் –

இஞ்சி – ஒரு இன்ச்

முந்திரி – 10

தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய்விட்டு சூடானவுடன், வரமிளகாய், பூண்டு, முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம்போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் பீட்ரூட், தேங்காய், மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவேண்டும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து கோலா உருண்டை சைஸில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டிய உருண்டைகளைப் போட்டு சீராக எல்லா புறமும் திருப்பிவிட்டு பொரித்தெடுக்கவேண்டும். ருசியான பீட்ரூட் கோலா உருண்டை தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள காரமான சட்னி அல்லது சில்லி சாஸ் நன்றாக இருக்கும் அல்லது பீட்ரூட் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுத்தால், அவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடுவார்கள்.

இதை சோற்றுக்கு சைடிஷ் ஆகவும், டீ, காபியுடன் சிற்றுண்டியாகவும் ருசிக்கலாம். ஜில்லென்ற தயிர் சாதத்திற்கு சூடாக இதை தொட்டுக்கொண்டால் மிகப் பிரமாதமாக இருக்கும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.