Banana Flower 65 : வாழைப்பூவை இப்டி செஞ்சு பாருங்க! இதை இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!-banana flower 65 try banana flower now ask for more and more and eat it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Flower 65 : வாழைப்பூவை இப்டி செஞ்சு பாருங்க! இதை இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

Banana Flower 65 : வாழைப்பூவை இப்டி செஞ்சு பாருங்க! இதை இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

Priyadarshini R HT Tamil
May 10, 2024 11:32 AM IST

Banana Flower : பன்னீர், காளிஃபிளவர், சிக்கன், மஷ்ரூம் என இத்ததை 65 சாப்பிட்டு இருப்பீர்கள். இப்படி ஒரு 65 சாப்பிட்டு இருக்கிறீர்களா? வாழைப்பூ 65 செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Banana Flower 65 : வாழைப்பூவை இப்டி செஞ்சு பாருங்க! இதை இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
Banana Flower 65 : வாழைப்பூவை இப்டி செஞ்சு பாருங்க! இதை இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

சோள மாவு – ஒரு ஸ்பூன்

கடலை மாவு – ஒரு ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – அரை ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

சுத்தம் செய்த வாழைப்பூவை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் சேர்த்து அலசி எடுக்கவேண்டும். அப்போதுதான் வாழைப்பூ கருக்ககாமல் இருக்கும். இதை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு, மிளகுத்தூள், சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

இதை அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் எண்ணெயை சூடாக்கி, இதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுத்தால் சூப்பர் சுவையில் வாழைப்பூ 65 தயார்.

இதை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்துகொடுத்தால் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். போதும் என்று கூற மனதே வராது. அந்தளவுக்கு சுவையானதாக இருக்கும்.

ஒரு சில குழந்தைகள் வாழைப்பூவை விரும்பி சாப்பிட மாட்டார்கள். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வாழைப்பூவை கட்டாயம் சாப்பிட்டவேண்டும். எனவே அதற்கு இதுபோல் 65 ஆக செய்துகொடுப்பது நல்லது.

வாழைப்பூ சுத்தம் செய்வது எப்படி?

வாழைப்பூவில் மடல்களை நீக்கிவிட்டு, உள்ளே உள்ள மலர்களின் இடையில் உள்ள நரம்பு போன்ற பகுதியையும், அதை மூடியிருக்கும் சிறிய இதழையும் நீக்க வேண்டும். அதை சேர்த்து வாழைப்பூவை செய்யக்கூடாது.

வாழைப்பூவின் நன்மைகள்

வாழைப்பூக்கள் தொற்றுக்களை அண்டவிடாமல் தடுக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை காக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பதற்றத்தை குறைத்து, மனநிலையை மாற்றுகிறது.

இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது.

வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.

செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

ஆண்குறி பிரச்னைகளைக் குணப்படுத்துகிறது.

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை காக்கிறது.

உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் வாழைப்பூவை அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.