Guru KuberaYogam: சமசப்தபார்வை.. கடலை மாலையோடு உக்கிரமாக பார்க்கும் குரு; குருவால் குபேரயோகம் பெறப்போகும் ராசிகள் யார்?
சிம்ம ராசி, சிம்ம லக்னத்திற்கு இந்தாண்டு நன்றாக பணவரவு வரும். பதவி உயர்வு, பிசினஸில் அடுத்தக்கட்டம் செல்வது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இந்தக்காலக்கட்டத்தில் நடக்கும்.
2024 ம் ஆண்டு குரு பகவானால் குபேரயோகத்தை பெறப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை ஜோதிடர் சிம்மா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்திற்கு பணவரவு நன்றாக இருக்கும்.
அதே போல, ரிஷப ராசிக்கும், ரிஷப லக்னத்திற்கும் இந்த ஆண்டில் பணவரவு நன்றாக இருக்கும். காரணம், உங்கள் ராசியின் மீதே குரு பகவான் அமர்ந்து இருக்கிறார். குருவை ஜோதிடத்தில் தனக்காரன் என்று அழைப்போம். இப்படியான அமைப்பு, உங்களிடத்தில் இருப்பதால் நீங்கள் காசை தேடி ஓடுவீர்கள். அது குறித்தான சிந்தனைகள் அதிகமாகும். பணம் பற்றிய சிந்தனைகள் எழும் போதுதான், பணத்தை தேடி ஓடுவோம். பணத்தை நாம் தேடும் போது, பணம் நம்மைத் தேடி வரும்.
கடகராசிக்கும் இந்தாண்டு பணவரவு நன்றாக இருக்கும். காரணம் குரு பகவான் லாபஸ்தானத்திலேயே அமர்ந்து இருக்கிறார். இது முக்கியமான விஷயம் ஆகும். லாபஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும், உங்களிடம் பணம் வந்து சேரும். அப்படி பார்க்கும் பொழுது சுபகிரகமான குருவே அங்கு இருப்பதால், இந்தாண்டு முழுக்க உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.
சிம்ம ராசி, சிம்ம லக்னத்திற்கு இந்தாண்டு நன்றாக பணவரவு வரும். பதவி உயர்வு, பிசினஸில் அடுத்தக்கட்டம் செல்வது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இந்தக்காலக்கட்டத்தில் நடக்கும்.
கன்னி ராசிக்கு இந்தாண்டு அமோகமாக பணவரவு இருக்கும். காரணம், குரு பகவான் சிறப்பு பார்வையாக கன்னி ராசியைப்பார்க்கிறார். குரு பகவான் கன்னிராசிக்கு பாக்யஸ்தானத்தில் இருக்கிறார்.
பொதுவாகவே, ஜாதகத்தில் பாக்யஸ்தானம் மிகவும் முக்கியமானது. இது ஏன் முக்கியமானது என்று சொல்கிறோம் என்றால், முன் ஜென்மத்தில் நாம் நிறைய நன்மைகளை செய்திருப்போம். அவையனைத்தையும் கொண்டிருப்பது அந்த பாக்யஸ்தானம்தான். அதுதான் 9 ம் வீடு.
இதன் மீது சுபகிரம் பயணிக்கும் போது, நமக்கு சுபகாரியங்கள், வெற்றி உள்ளிட்டவை கிடைக்கும். அடுத்த ஒரு வருடத்தில் சுபகிரகமான குரு பகவான் அங்கேயே இருக்கப்போகிறார். அதனால் தனவரவு நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்திற்கும் பணவரவு இந்தாண்டு நன்றாக இருக்கும். குரு பகவானின் சமசப்தமான பார்வை உங்கள் மேல் விழுகிறது. குரு பகவான் ஓரக்கண்ணால் பார்த்தாலே சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படும் நிலையில், நேரடியாக பார்க்கும் போது, அதிஅற்புத பலன்கள் கிடைக்கும். ஆகையால் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன விதமான ஸ்டெப் எடுத்தாலும், அது வெற்றியை நோக்கியேச் செல்லும். நீங்கள் முயற்சி எடுத்தால் போதும், வெற்றி உங்கள் கைவசம் வந்து விடும்.
தனுசு மற்றும் தனுசு லக்னத்திற்கும் இந்த குபேர யோகம் கிடைக்கும். குரு பகவான் 6ம் இடத்தில் மறைந்திருந்தாலும், குரு உடைய பார்வை, உங்களது 10ம் வீட்டில் விழுகிறது. ஆகையால் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.அதே போல மகரராசி மற்றும் மகரலக்ன காரர்களுக்கு, குபேர யோகம் கிடைக்கும்.
குரு பகவான் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடுத்த ஒருவருடம் இருப்பார். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது மிக முக்கியமான ஸ்தானம் ஆகும். இதில் குரு பகவான் இருப்பது குபேர யோகம் கிடைப்பதற்கான வழி. அவர், 5 இடத்தில் இருந்து உங்களது லக்ன ஸ்தானத்தையும் பார்ப்பார், பாக்கியஸ்தானத்தையும் பார்ப்பார். ஆகையால் மகர ராசி மற்றும் மகர லக்னகாரர்கள் இந்த காலக்கட்டத்தில், சிறிது முயற்சி எடுத்தாலே போதும் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைவர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்