தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Badam Chicken Momos: குளிர்காலத்துக்கேற்ற பாதாம் சிக்கன் மோமோஸ்

badam chicken momos: குளிர்காலத்துக்கேற்ற பாதாம் சிக்கன் மோமோஸ்

I Jayachandran HT Tamil
Dec 01, 2022 09:40 PM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவையாக குளிர்காலத்தல் சாப்பிடக்கூடி பாதாம் சிக்கன் மோமோஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாதாம் சிக்கன் மோமோஸ்
பாதாம் சிக்கன் மோமோஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

குளிர்காலத்தில் மாலைச் சிற்றுண்டியாக பாதாம் சிக்கன் மோமோஸ் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும்.

மோமோஸ் செய்வதற்குத் தேவையானவை:

பாதாம் 25

சிக்கன் கைமா- 250 கிராம்

3 டீஸ்பூன் கேரட் நைஸாக நறுக்கியது

3 டீஸ்பூன் ஸ்பிரிங் ஆனியன் நைஸாக நறுக்கியது

கால் அங்குலம் இஞ்சி- பொடியாக நறுக்கியது

1 டீஸ்பூன் சோயா சாஸ்

1 டீஸ்பூன் நல்லெண்ணெய்

1 டீஸ்பூன் ஆய்ஸ்டர் சாஸ்

பாதி முட்டை

செய்முறை-

மாதாம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

சிக்கன் கைமாவை ஒரு கிண்ணத்தில் எடத்துக் கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் கைமாவில் சேர்த்து நன்கு பிசையவும்.

பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

ஸ்டீமரில் தண்ணீரை ஊற்றி 15 நிமடங்கள் நன்கு கொதிக்க விடவும். ஆவி வரத்தொடங்கியவுடன் கைமா உருண்டைகளை வைத்து வேக விடவும்.

பின்னர் அதை இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும்.

WhatsApp channel