தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாப்பிட்ட பின் செய்ய கூடாத செயல்கள் என்னென்ன?

சாப்பிட்ட பின் செய்ய கூடாத செயல்கள் என்னென்ன?

Aarthi V HT Tamil
May 19, 2023 12:50 PM IST

சாதம் சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்கிறீர்களா? இது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டீர்கள்.

சாப்பிட்ட பின் செய்ய கூடாத செயல்கள்
சாப்பிட்ட பின் செய்ய கூடாத செயல்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

சில பழக்கங்கள் செரிமானத்தை கடுமையாக பாதிக்கின்றன. எனவே சாப்பிட்ட பிறகு இந்த செயல்கள் செய்வதை உடனே நிறுத்துங்கள். இல்லையெனில் உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தூங்க வேண்டாம்

சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு வசதியாக இருக்க நம் எண்ணம் தோன்றும். ஆனால் அவ்வாறு செய்வது செரிமான செயல்முறையைத் தடுக்கிறது. உணவு மூலக்கூறுகள் சிதைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. உணவு என்பது பாதி பிரச்னை. அதனால் அதிக உணவு சாப்பிட்ட உடனேயே தூங்குவதை தவிர்ப்பது நல்லது.

புகை பிடிக்க வேண்டாம்

சிலர் சாப்பிட்ட உடனேயே சிகரெட் புகைப்பார்கள். ஆனால் இது ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுக்குப் பிறகு புகைப்பிடிப்பது ஒரே நேரத்தில் 10 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம். அதாவதது, அது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

குளிப்பது

குளிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. அதனால் தான் சாப்பிட்ட உடனே குளிப்பது நல்ல பழக்கம் இல்லை என்று வீட்டில் சொல்கிறார்கள். வயிற்றைச் சுற்றியுள்ள ரத்த ஓட்டத்தில் குளியல் ஒரு ஆழமான விளைவைக் கொண்டிருக்கிறது. குளிக்கும் போது உடலின் மற்ற பாகங்கள் பாதிக்கப்படும். இது செரிமானத்தை பாதிக்கும்.

பழங்கள் சாப்பிட வேண்டாம்

சாதம் சாப்பிட்ட உடனேயே சிலர் பழங்களைச் சாப்பிடுவது பலரின் பழக்கம். பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உணவு உண்ட உடனேயே அவற்றை சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தும்.

பழங்களை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு. அது ஆரோக்கியத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.

தேநீர்

தேநீர் பொதுவாக அமிலத்தன்மை கொண்டது. தேநீரிலும் காஃபின் உள்ளது. இதனால் உணவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. உணவு உண்ட உடனேயே ஒரு கப் தேநீர் அருந்துவது உணவு மூலக்கூறுகளின் சிதைவைத் தடுக்கிறது. உணவில் உள்ள புரதச்சத்து அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உணவுக்குப் பிறகு டீ குடிப்பதால் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் இடையூறு ஏற்படும். அதனால் சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட டீ குடிக்காதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்