உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Dec 14, 2024 10:08 AM IST

மனம் திறந்து பேசவில்லையென்றால் கவலைவேண்டாம். குழந்தைகளை வழிக்கு கொண்டு வரும் வழிகள் இதோ.

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!
உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது? இந்த 9 வழிகள் உதவும்!

கடந்த காலத்தில் புறக்கணிப்பு

கடந்த காலத்தில் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முயலும்போது, நீங்கள் அதை மறுத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் அவர்கள் உங்களிடம் பகிர்வதை நிறுத்தியிருப்பார்கள். எனவே அவர்களை நீங்கள் நல்ல முறையில் கவனிக்கவேண்டும். அவர்களுடன் பேசும்போது கண்களை பார்த்து பேசவேண்டும். அவர்கள் கூறும்போது, அதில் இடையூறு செய்யக்கூடாது. அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவிடுங்கள், அப்போது அவர்களிடம் நீங்கள் கூறவேண்டியது, ‘நீ மனஅமைதியின்றி இருப்பதுபோல் தோன்றுகிறது’ இது நீங்கள் புரிந்துகொண்டதை அவர்களுக்கு உணர்த்தும்.

விளைவுகள் குறித்த அச்சம்

குழந்தைகளிடம் தவறுகளுக்கு தண்டனைகள் கிடைக்குமோ என்ற அச்சம் எப்போதும் நிலவும். எனவே அவர்களிடம் நேர்மைதான் முக்கியம் என்பதை ஆணித்தரமாகக் கூறுங்கள். நீங்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துங்கள். அமைதியாக இருந்து, பிரச்னைகளைத் தீர்த்து, தவறுகள் என்பது கற்றலின் ஒரு அங்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

உணர்வுகளை பகிர்வதில் சிக்கல்

குழந்தைகளுக்கு எதையும் தெளிவாகக் கூற முடியாது. அவர்களின் எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தும்போது, அவர்கள் திறந்த கேள்விகளைக் மட்டுமே கேட்க உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் கதைகளை கூறட்டும் அல்லது வரைந்து காட்டட்டும். அவர்களிடம் பொறுமையாக இருங்கள். இந்த திறன்களும் அவர்களுக்கு குழந்தையில் இருந்தே வரவேண்டும்.

அவர்களின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள்

வளரிளம் பருவத்தில் சுதந்திரம் மிகவும் அவசியம். அவர்கள் உணர்வு ரீதியானவர்களாக இருப்பார்கள். அவர்கள் வளர்வதற்கு இடம்கொடுங்கள். அதேநேரத்தில் அவர்கள் திறந்த உரையாடலை நடத்தவும் வலியுறுத்துங்கள். அவர்களின் சுதந்திரத்தை மதியுங்கள். அதேநேரத்தில் அவர்கள் எந்த நேரத்திலும், எதையும் உங்களிடம் கூறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். தேவைப்படும்போது அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிக்கல்

குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் குழப்பம் ஏற்படும். இது அவர்களுக்கு அவர்களின் உணர்வு ரீதியான சொல்வளத்தை அதிகரிப்பதில் இருந்து நீங்கள் எளிதில் கடந்துவிட முடியும். உணர்வு மேலாண்மையை அவர்களுக்கு எப்படி செய்துகொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். குறிப்பாக கோவம், துன்பம், உற்சாகம் போன்ற உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

நம்பிக்கை குறைவு

உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கு பலவீனமான பிணைப்பு இருந்தால், அதுவும் உங்களிடம் அவர்கள் மனம் விட்டு பேசுவதற்கு ஒரு தடையாக இருக்கும். இந்த பிணைப்பை நீங்கள் அவர்களுடன் தரமான நேரம் செலவிடுவதன் மூலம் மேம்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்த நடவடிக்கைகளை அவர்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் செய்யுங்கள். நம்பிக்கையை ஊக்கப்படுத்துங்கள். திறந்த உரையாடலுடன் அனுதாபம் மற்றும் நம்பிக்கையை வளர்த்தெடுங்கள். அது அவர்களுக்கு உதவும்.

சங்கடம்

குழந்தைகள் சில தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து உரையாடும்போது சங்கடமாக உணரலாம். உடல் மாற்றம் அல்லது உறவுகள் என்று அது இருக்கலாம். எனவே குறிப்பிட்ட சென்சிட்டிவான டாபிக்குகளில் பேசும்போது, அதை நீங்கள் பொதுவானதாக்குங்கள். குழந்தை வயதில் இருந்தே அவர்களுக்கு சில டாபிக்குகள் குறித்த பேசுங்கள். சில விஷயங்கள் பேசும்போது உங்களுக்கு சங்கடம் ஏற்படும். அது சரியானதுதான், எனவே திறந்த மனநிலை மற்றும் நேர்மை இரண்டையும் வளர்த்தெடுங்கள்.

சமூக பாதிப்புகள்

வயது அதிகரிக்க அதிகரிக்க குழந்தைகள் நண்பர்களிடம் அதிகம் உதவி பெற்றுக்கொள்வார்கள். பெற்றோர்களை அவர்கள் திரும்பிப்பார்க்க மாட்டார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். நீங்கள் அவர்களுடன் பேச எப்போதும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள செய்யுங்கள். அவர்களின் வாழ்வில் ஈடுபடுங்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையில் மட்டுமே அதைச் செய்யுங்கள்.

விமர்சன அச்சம்

குழந்தைகளுக்கு தாங்கள் விமர்சிக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களை குற்றம் சுமத்தினாலோ அவர்கள் குற்றங்களை மறைத்துக்கொள்வார்கள். இந்த சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டுமெனில், அவர்களை விமர்சிக்காத, பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்களை நன்றாக கவனியுங்கள். வெளிப்படைத்தன்மையை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு நேர்மறையான ஒரு விஷயத்தை அறிவுறுத்திவிட்டால் போதும். அவர்கள் ஏற்காத விஷயங்களைக் கூட நேர்மறையான வழியில் கூறிவிடுங்கள். அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.