சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!

சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!

Malavica Natarajan HT Tamil
Nov 29, 2024 10:34 AM IST

நாக சைதன்யா தனது வருங்கால மனைவி சோபிதா துலிபாலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!
சோபிதா ஒரு குடும்பப் பெண்.. அவர்கள் சொல்வது முற்றிலும் பொய்.. உண்மையை உடைத்த சைதன்யா!

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஜூம் நேர்காணல் ஒன்றில் நாக சைதன்யா தனது வருங்கால மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் சோபிதைவை முதன்முதலில் சந்தித்தது குறித்தும் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இங்கு தான் சோபிதாவை முதலில் பார்த்தேன்

இந்த நேர்காணலில் பேசிய நாக சைதன்யா, சோபிதாவை முதன்முறையாக அவரது ஓடிடி நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்காக மும்பை சென்ற போது சந்தித்தேன் எனக் கூறுகிறார். அவர் நிகழ்ச்சிக்கு சென்ற அதே நேரத்தில் அதே மேடையில், சோபிதா பங்கேற்றார். அந்த ஓடிடி தளம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம் என்றார்.

சோபிதா குடும்பத்தில் வசதியாக உணர்ந்தேன்

பின், அந்த நேர்காணலில் அவர், சோபிதாவின் குடும்பத்தையும் பாராட்டினார். சோபிதாவின் குடும்பத்தினர் என்னை ஒரு மகனைப் போல நடத்தினர். சில மாதங்களாக சோபிதாவையும் அவரது குடும்பத்தையும் அறிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அவர்களிடம் மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

எங்கள் இரண்டு பேரின் குடும்பங்களும் ஒன்றாக பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் இரண்டு பேரின் குடும்பங்களிலும் நிறைய விஷயங்கள் பொதுவானவையாக உள்ளது.

சோபிதா குடும்பப் பெண்

சோபிதா ஒரு குடும்பப் பெண். நான் அவருடன் இணைந்து சில பண்டிகைகளை கொண்டாடினேன். தற்போது நான் எங்கள் திருமண நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

விருந்தினர்கள் குறைவு

மேலும் பேசிய அவர், பாரம்பரிய அடிப்படையில் நடைபெறும் எங்கள் திருமணம் பிரமாண்டமானதாக இருக்கும். ஆனாலும், எங்கள் திருமணத்தில் குறைவான விருந்தினர்களே பங்கேற்க உள்ளனர். எங்கள் திருமணம் தங்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. அந்த இடம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானது.

பாரம்பரிய முறையில் திருமணம்

தற்போது எங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. சம்பிரதாயங்களை பின்பற்றி எங்கள் திருமணம் நடைபெறும். எங்கள் திருமணத்தை மக்கள் எப்போதும் நினைவுகூர்ந்து இருப்பர். அந்த நாளுக்காக மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இது முற்றிலும் தவறானது

எங்கள் திருமண காட்சிகள் ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் போலியானவை. அத்தகைய ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார். முன்னதாக நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்தை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் 50 கோடி ரூபாய்க்கு ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது என வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.