திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா? இதெல்லாம் மனசுல வெச்சுக்கங்க; ஒரு அறிவுரை!
நீங்கள் திருமணம் செய்ய தயாராக உள்ளீர்கள் என்றால் இதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.

திருமணம் செய்ய காத்திருக்கும் பெண்களா? ஹேமா ராக்கேஷ் என்பவர் எழுதிய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்று பாருங்கள். திருமணத்திற்கு முன் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்தல் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல உங்களுக்கான மரியாதையும் சுய அடையாளமும் அதுதான். இருசக்கர வாகனம் அல்லது கார் அல்லது இரண்டுமே ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.
நிதி மற்றும் சேமிப்பு
நிதி மற்றும் சேமிப்பு சார்ந்த அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். Net Banking, Mobile Banking போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள், EB bill, Insurance, Tax போன்றவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தனியாக பயணம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் அம்மா வீடு, உறவினர் வீடு என்றால் கணவர் தான் கொண்டு வந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். திருமணம் ஆனாலும் உங்கள் நட்பு வட்டத்தை கைவிடாதீர்கள். உங்களுக்கென்று hobbies வைத்துக்கொண்டால் திருமண வாழ்வின் Routine மீதான சலிப்பு வராது.
உனக்காக உனக்கு பிடிச்ச எல்லாமே நான் மாத்திக்கறேன் பாரு என்று சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள் (இருவருமே). சில அடிப்படை பழக்கவழக்கங்கள் என்றுமே மாற்ற முடியாது. இதுதான் நீங்கள் என உங்களுக்கென்று இருக்கும் சில தனித்தன்மையை என்றுமே விட்டுக்கொடுக்காதீர்கள். நீ முன்ன மாதிரி இல்லனு திருமண உறவில் பிரச்னை வர காரணமே நான் மாத்திக்கறேன் பாருங்கள் என்ற வார்த்தைகள் தான்.