பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம்; இதோ ரெசிபி! சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம்; இதோ ரெசிபி! சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும்!

பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம்; இதோ ரெசிபி! சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Nov 04, 2024 02:33 PM IST

பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம், இதோ ரெசிபி, சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும். எஞ்சிய ரொட்டி வகைகளுக்கும் ஏற்றது.

பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம்; இதோ ரெசிபி! சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும்!
பன்னீர் பட்டர் மசாலா பிரியரா நீங்கள்? இதை முட்டையிலும் செய்யலாம்; இதோ ரெசிபி! சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அள்ளும்!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டையை நீங்கள் வழக்கம்போல் எடுத்துக்கொள்ளாமல் முட்டை பட்டர் மசாலா செய்து சாப்பிட சுவை அள்ளும். பட்டர் மசாலா பிரியர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை – 4

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

முந்திரி – 10

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1

கிராம்பு – 2

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

முதலில் முட்டை வேகவைத்து உடைத்து ஓடுகளை நீக்கிவிட்டு, இடையில் மட்டும் கோடு போட்டு கீறி வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து முந்திரி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக குழைய வேக விடவேண்டும். அடுத்து மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரையும் வதக்கிக்கொள்ளவேண்டும்.

பச்சை வாசம் போன பின்னர் இறக்கி ஆறவைக்கவேண்டும். ஆறியவுடன் மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போனவுடன், அரைத்து வைத்த மசாலாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கிவிடவேண்டும்.

வேகவைத்த முட்டையையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, மசாலாக்கள் நன்றாக முட்டையில் இறங்கும் வரை விட்டு, மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான முட்டை பட்டர் மசாலா தயார். இதை நீங்கள் காளான், சிக்கன், காளிஃப்ளவர், ப்ரோக்கோலி என எதை வைத்து வேண்டுமானாலும் செய்யலாம்.

சப்பாத்தி, பூரி, ரொட்டி, பரோட்டா, ஃபுல்கா போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

குறிப்புகள்

மசாலாவை அரைக்கும்போது அதில் சிறிது புதினாவும் சேர்த்து அரைக்கலாம். சிலருக்கு பட்டர் மசாலா என்றால் அது இனிப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் தேவைப்பட்டால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.