ஹெர்பல் டீ பிரியரா? அதற்கு ஏற்ற 5 வகை மூலிகை தாவரங்களை பால்கனியிலே வளர்க்கலாம்! இதோ ஈசி ஸ்டெப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஹெர்பல் டீ பிரியரா? அதற்கு ஏற்ற 5 வகை மூலிகை தாவரங்களை பால்கனியிலே வளர்க்கலாம்! இதோ ஈசி ஸ்டெப்ஸ்!

ஹெர்பல் டீ பிரியரா? அதற்கு ஏற்ற 5 வகை மூலிகை தாவரங்களை பால்கனியிலே வளர்க்கலாம்! இதோ ஈசி ஸ்டெப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Dec 13, 2024 07:00 AM IST

வீட்டு பால்கனியிலே வளர்க்கக்கூடிய மூலிகை தாவரங்கள் என்ன?

ஹெர்பல் டீ பிரியரா? அதற்கு ஏற்ற பல வகை மூலிகை தாவரங்களை பால்கனியிலே வளர்க்கலாம்!
ஹெர்பல் டீ பிரியரா? அதற்கு ஏற்ற பல வகை மூலிகை தாவரங்களை பால்கனியிலே வளர்க்கலாம்!

துளசி

துளசி மற்றும் எலுமிச்சை டீ அல்லது துளசி மற்றும் இஞ்சி தேநீரை இந்த குளிருக்கு பருகினால், இதம் மட்டுமின்றி ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இதை நீங்கள் டீ பேக்குகளைப் பயன்படுத்தி பருகாமல், வீட்டிலேயே துளசிச் செடியை வளர்த்து பயன்பெறலாம். இதனால் உங்களுக்கு இதம், ஆரோக்கியம் இரண்டும் உறுதி.

வீட்டில் துளசி வளர்ப்பது எப்படி?

உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அருகில் உள்ளவர்களின் வீட்டில் இருந்து துளசி செடிகளை வெட்டி வந்து நட்டு வைத்துக்கொள்ளுங்கள் அல்லது விதைகளைத் தூவி வளர்க்கலாம். துளசி வளர்க்க நல்ல மண் கட்டாயம் வேண்டும். எனவே உங்கள் பால்கனியில் வைக்க உள்ள தொட்டியில் நல்ல மண்ணை மட்டும் நர்சரி கார்டனில் இருந்து வாங்கி நிரப்பிக்கொள்ளுங்கள். உங்கள் துளசிச் செடிக்கு கட்டாயம் தினமும் 4 மணி நேரம் வெயில் மட்டும் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். துளசிச் செடி முற்றியவுடன், அதன் இலைகளைப் பறித்து நீங்கள் இஞ்சி, ஓமவல்லி, வெற்றிலை சேர்த்து டீயாகவோ அல்லது கசாயமாகவோ வைத்து பருகலாம்.

புதினா

குளிர் காலத்துக்கு ஏற்றது புதினா டீ. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும், புத்துணர்வையும் தரும். குறிப்பாக உங்களுக்கு தொண்டையில் கம்மல் ஏற்படும்போது, இது மிகவும் சிறந்தது. உங்களுக்கு வழக்கமான டீ பேக்குகள் பிடிக்கவில்லையென்றால், இந்த புதினா டீ என்பது கொஞ்சம் காரமாகவும் இருக்கும். அதற்கு நீங்களே புதினா செடிகளை வளர்க்கலாம்.

புதினா செடிகள் வளர்ப்பது எப்படி?

புதினா செடிகள் பற்றிப் படர்ந்து நன்றாக அடர்ந்து வளர்பவை. இந்த வளர்ச்சி நிலை விரைவிலேயும் நடக்கும். எனவே இதை நீங்கள் பரவலாக நடவேண்டும். இதை நீங்கள் தொட்டியில் வளர்த்தால் நல்ல ஆழமான தொட்டியை பயன்படுததிக்கொள்ளுங்கள். நல்ல புதினாவை வாங்கி அதன் இலைகளைப் பறித்துவிட்டு, தண்டுகளை மட்டும் நல்ல மண்ணில் புதைத்து வையுங்கள். 20 முதல் 30 நாட்களில் புதினா செடி இலைகள் விடத்துவங்கும். இதைப்பறித்து நீங்கள் தேநீர் தயாரித்து பருகினால் உங்களுக்கு இதமாகவும் இருக்கும். புத்துணர்வும் தரும்.

லெமன் கிராஸ்

லெமன் கிராஸில் தான் சரியான எலுமிச்சையின் மணம் மற்றும் குணம் இரண்டும் இருக்கும். அந்த இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டால், உங்கள் வீடு முழுவதிலுமே ஒரு நல்ல வாசம் வீசும். அந்த டீயும் இதமானதாகவும், இயற்கையானதாகவும் இருக்கும்.

லெமன் கிராஸை வீட்டில் வளர்ப்பது எப்படி?

மார்க்கெட்டில் லெமன் கிராஸ் செடிகள் கிடைக்கும். நன்கு முற்றிய லெமன் கிராஸ் செடியில் இருந்து வெட்டி எடுத்து, நட்டு வைத்தும் வளர்க்கலாம். அதன் தண்டை 3 முதல் 4 நாட்கள் தண்ணீரில் போட்டு வைத்தால், அதில் இருந்து புதிய வேர்கள் உருவாகிவரும். இதை நீங்கள் அப்படியே தொட்டிக்கு மாற்றி வளர்த்துக்கொள்ளலாம்.

கேமோமைல் (சீமை சாமந்தி)

கேமோமைல் தேநீர் உங்களுக்கு இதமளிக்கும். உங்களுக்கு நல்ல உறக்கத்தைத்தரும். எனவே இந்த தேநீரை நீங்கள் இரவு உறங்கச் செல்லும்முன் கூட பருகலாம். இதில் மஞ்சள் நிறம் படர்ந்திருக்கும். கேமோமைல் முட்டுகள் மற்றும் பூக்கள் உங்கள் பால்கனி தோட்டத்துக்கு அழகையும் தரும்.

கேமோமைல் செடியை வளர்ப்பது எப்படி?

கேமோமைல் செடியை வளர்ப்பதற்கு சில ட்ரிக்குகள் தெரிந்திருக்கவேண்டும். நீங்கள் தோட்டம் அமைக்க இப்போதுதான் துவங்கியுள்ளீர்கள் என்றால், நீங்கள் விதைகளை ஆன்லைனில் வாங்கி, அவற்றை மண்ணில் மூடிவையுங்கள். ஒரு தொட்டியில் இடைவெளிவிட்டு அவற்றைப் போட்டு, குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது நேரடி சூரியஒளியில் வையுங்கள். பூக்கள் பூக்கத்துவங்கும்போது, அதை பறித்து டீ தயாரித்து பருகுங்கள்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி டீயை உலர்ந்த ரோஜா இதழ்கள், எலுமிச்சை அல்லது லாவண்டர் பூக்களுடன் சேர்த்து தயாரித்து பருகினால், குளிர் மாதங்களுக்கு உள்புறம் இதத்தைத் தரும்.

ரோஸ்மேரி செடியை வளர்ப்பது எப்படி?

ரோஸ்மேரியை நீங்கள் முதிர்ந்த செடியில் இருந்து வெட்டி எடுத்து வளர்க்கலாம். ஆனால் அதற்கு தாமதம் ஆகும் என்பதால், மீடியம் அளவுக்கு வளர்ந்த செடியை வாங்கி வளர்ப்பதுதான் சிறந்தது. அப்படியே கொத்தாக பறித்து, 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கினால் சூடான கேமோமைல் டீ தயார். இனி என்ன மழையா, குளிரா உங்களை ஒன்றும் செய்யாது. ஜாலியாக விதவிதமாக மூலிகை தேநீர் பருகி மகிழ்ந்திருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.