இந்த 10 அறிகுறிகளா? அச்சச்சோ உங்கள் உடலில் என்ன பிரச்னை பாருங்கள்! இனி மிகவும் கவனம் தேவை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த 10 அறிகுறிகளா? அச்சச்சோ உங்கள் உடலில் என்ன பிரச்னை பாருங்கள்! இனி மிகவும் கவனம் தேவை!

இந்த 10 அறிகுறிகளா? அச்சச்சோ உங்கள் உடலில் என்ன பிரச்னை பாருங்கள்! இனி மிகவும் கவனம் தேவை!

Priyadarshini R HT Tamil
Nov 24, 2024 06:02 AM IST

உடலுக்கு தேவையான மினரல்கள் கிடைக்காவிட்டால் என்னவாகும் பாருங்கள்?

இந்த 10 அறிகுறிகளா? அச்சச்சோ உங்கள் உடலில் என்ன பிரச்னை பாருங்கள்! இனி மிகவும் கவனம் தேவை!
இந்த 10 அறிகுறிகளா? அச்சச்சோ உங்கள் உடலில் என்ன பிரச்னை பாருங்கள்! இனி மிகவும் கவனம் தேவை!

வாயில் புண்

வைட்டமின் பி12, இரும்பு பி9 மற்றும் சிங்க் சத்துக்கள் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்கு வாயில் அல்சர் புண்கள் தோன்றும். இந்த ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான திசுக்களை வளரச்செய்வதற்கு முக்கியமானதாகும். இவை குறைந்தால், வாயில் கடுமையான புண்கள் ஏற்பட காரணமாகின்றன.

நகம் உடைவது

இரும்புச்சத்துத்துக்கள், வைட்டமின் பி7, சிங்க் மற்றும் கால்சியம் சத்துக்கள் குறைந்தால் உங்களின் நகம் கடுமையாக உடையும். இந்த ஊட்டச்சத்துக்கள்தான் நகத்திற்கு வலு சேர்ப்பவை, இவை குறைந்தால் நகத்தின் தோற்றமே மாறிவிடும். நகம் தூளதூளாக உடைய காரணமாகிவிடும். எனவே நீங்கள் நகத்தையும் கண்காணிக்கவேண்டும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் வைட்டமின் டி, பி12 மற்றும் பி9, இரும்புச்சத்துக்கள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் குறைவதால் ஏற்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் மூளை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நரம்பியல் டிரான்ஸ்மிட்டர்கள் உற்பத்திக்கும் உதவுகின்றன மற்றும் உங்கள் மனநிலையை மாற்றுகின்றன.

ஈறுகளில் ரத்தம் வடிதல்

கால்சியம், இரும்பு மற்றும் சிங்க் சத்துக்கள் குறைந்தால் உங்கள் பற்களில் உள்ள எலும்புகள், தாடை எலும்புகள் என அனைத்தும் வலுவிழக்கும். இந்த சத்துக்கள் பற்கள் மற்றும் தாடை எலும்புகளுக்கு மிகவும் அவசியம். அவை குறைந்தால் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

சோர்வு

சோர்வு, இரும்புச்சத்துக்கள், வைட்டமின் பி 12, பி9, டி மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஆற்றல் உற்பத்தியாவதற்கும், ஆக்ஸிஜன் செல்வதற்கும், தசைகள் இயக்கத்துக்கும் மிகவும் முக்கியமானது. இவை குறைந்தால், தொடர்ந்து சோர்வு, பலவீனம் போன்றவை ஏற்படும்.

தசை வலி

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் குறைந்தால் தசைகளில் வலிகள் ஏற்படும். இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். இவை குறைந்தால் அது எலக்ட்ரோலைட் சமநிலைக்கு இடையூறு செய்யும், நரம்பியல் தசைகளில் இயக்கத்தை பாதிக்கும். இதனால் வலிகள் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.

பலவீனமான எலும்புகள்

உங்கள் உடலில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் குறைந்தால் உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையும். இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்திக்கு மிகவும் நல்லது. இது குறைந்தால் எலும்புப்புரை நோய் மற்றும் எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படும். எலும்பு மினரல்களைக் குறைக்கும்.

மரத்துப்போதல்

உங்கள் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவதற்கு கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் முக்கியமானதாகும். இவை உங்கள் உடலில் குறைந்தால், நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இவை மறத்துப்போதல், கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

இதய துடிப்பில் மாற்றம்

உங்கள் உடலில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் குறைந்தால் அது உங்கள் இதய துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். அது அரிரிதமியா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வறண்ட சருமம்

சரும வளர்ச்சிக்கு சிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் குறைந்தால் சருமம் வறண்டு போகும். எனவே உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான உதவிகளைப் பெறுவது நல்லது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.